சுயமரியாதைக்கு நன்றி...
எம் இனம் காத்திட எழுந்தருளிய ஒளிஞாயிறு.....
அறியாமையை அடித்தொழிக்க வந்த ஞானச்சூரியன்.....
இவனைத் திட்டி இன்றும் வயிறு வளர்க்கும் பலருக்காக மூத்திரப்பையைச் சுமந்து நித்திரையின்றி யாத்திரை செய்த பகுத்தறிவுப்பகலவன்.....
சுய சிந்தனைக்காரன்!!
பொய்மையான கட்டமைப்புச்சுமைகளையும், தீமையான தீண்டாமைச்சுவர்களையும், பெண்ணடிமை கயமைத் தனத்தையும்
சுக்கு நூறாய் நொறுக்கி உடைத்தெறிந்த பேரறிவுப்பெரியோன்!
புதிய சிந்தனைக்காரன்!!
தேசியம், புனிதம், விசுவாசம், பக்தி, கடவுள், பூசை, புனஸ்காரம், என எல்லாப் புனிதக் கற்பனைகளையும் காலில் போட்டிருந்த செருப்பால் அடித்துத்துவைத்த சுயமரியாதைச் சூரியன்......
எங்கள் தாத்தன்!
நாங்கள் உட்கார்ந்த இடத்தை மாட்டுப்பீயையும், மாட்டு மூத்திரத்தையும் தெளித்து சுத்தமாக்கியவர்களை கண்டம் விட்டு கண்டம் ஓட வைத்தவன்....
மானமும் அறிவும் மட்டுமே உனக்கு அழகு என்று தலைமுறை தலைமுறையாய் குனிந்திருந்த தமிழனை தலைநிமிரச் செய்த
எங்கள் குலப்பெரியோன்.....
ராமசாமி சொல்லிட்டான்னு ஒடனே கேட்டுறாத, நீ தேடி உனக்கு சரின்னு படுதா என்று தமிழனை ஞானத்தை நோக்கி திரண்டு ஓடச்செய்த திராவிடத் தந்தையவன்!
பெரியார் இல்லாட்டி படிச்சு இருக்க மாட்டீங்களோ?பெரியாருக்கு முன்னாடி தமிழன் முட்டாளா இருந்தானா? "பெரிய மயிறு இந்தப் பெரியார் என்று சொல்லிச் சிரிக்கும்" பல மேட்டுக்குடிச் சீமான்களையும் "பனையேறி" கீழே இறக்கி, அடித்து படிக்க வைத்தப் பண்பாட்டுச் சீர்திருத்தியச் செம்மல்....
மானுடத்தின் மகுடம் அவன்!
"திராவிடன்" "தமிழன்னு" சொல்லி சொல்லியே எங்கள இன்னும் "பள்ளனாய் பறையனாய்" வச்சு இருக்காய்ங்க என்று சொல்லிப் புலம்பும் ரஞ்சித் பஞ்சமர்களையும் அதட்டி அறிவு வளர்த்த பெருந்தாத்தன்...
சூத்திரனின் அறிவுச் சூத்திரம் அவன்!
ஆண்ட சாதி, அரச பரம்பரை, வீர சைவம், வன்னிய குல சத்திரியன், தேவண்டா என்று சொல்லிய எல்லாத்தையும், பாப்பானப் பொறுத்தவரை நீ வெறும் சூத்திரப்பயலும் தேவுடியப்பயலும் தாண்டா என்று புட்டத்தில் அடித்து முன்னேறச் செய்த கரும்புரட்சிக்காரன்
கருப்புச் சட்டைக்காரன்!!
அவனுக்கு நாம வேணாம்!
ஆனா
நமக்கு அவன் வேணும்......
வணக்கத்தையும்
போற்றுதலையும் பொடிப்பொடியாக்கிய சுயமரியாதைக்கு நன்றி!
@cupidbuddha
Subscribe to:
Post Comments (Atom)
- magical realism
- ponniyan selvan @cupidbuddha
- queen elizabeth monarch sun
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......

0 comments:
Post a Comment