விட்டு,விடுதலையாகி......

முகம்
எனக்கு என்னவோ எப்பொழுதும்
நிறைய கிடைக்கிறது!!!
எனக்கு தேவைப்படுவதும்
என்னிடம் தேவைப்படுவதுமாக,
அனேக முகங்கள்
அடுக்கடுக்காக
எனது அகமாறியில்
அடுக்கிவைக்கப்பட்டு
இருக்கிறது!!!
ஒரு நாளைக்கு
ஒன்றென்று
சில பொழுதில்.
ஒரு வேளைக்கு
ஒன்றென்று
சில பொழுதில்.
சில பொழுதில்
நொடிக்கொன்றாக
தேவைப்படுகிறது
எனக்கும்,
என்னிடம் பிறருக்கும்!!!
எனக்கு பொருத்தமானதை
எனக்கு நானே
பொருத்திக்கொள்வதை விட
அவரவர்களுக்கு
விருப்பமானதையும்
தேவையானதையும்
எனக்கு
அணிவிப்பதே
எல்லோருக்கும்
எப்பொழுதும்
பிடித்திருக்கிறது!!!
பசி,வலி,காமம்,வஞ்சம்
என பல முகங்கள்
உணர்வாய்
குழுமி நானாய்
பொருள்பட.....
முகங்களே எனது அளவுகோலாக
சற்றே அயர்வுதான்.
எப்படித்தான் கழற்றினாலும்
எதாவது ஒரு
முகம்
எப்படியோ
ஒட்டிக்கொள்ளதான் செய்கிறது
பிணைப்புகள்,
பிணக்குகள்,
சங்கடங்கள்,
சடங்குகள்,
வஞ்சங்கள்,
வக்கிரங்கள்,
வாதங்கள்,
பூசல்கள்,
என
என்னுள்
முகாமிட்டுள்ள
முகங்கள்!!!
வாடகை முகங்கள்
அனைத்திலிருந்தும்
விலகி,
விட்டு
விடுதலையாகி
நீராய்...
நெருப்பாய்....
மலையாய்....
வானாய்....
வெளியாய்....
ஆடாய்.....
மாடாய்.....
ஆறை மறந்த ஏழாய்.....
பிரபஞ்சத்தின்
பின் வெளியில்
பித்தனாய்,
புத்தனாய்,
நாபிக்குள் இருக்கும்
நானாய்
சுகிக்க ஆசை!!!
வல்லமை தாராயோ....?
என்
சூனியத் தாயே

4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ரசனையுள்ள வரிகள்

cupidbuddha said...

நன்றி நண்பரே.........
வந்தமைக்கும்,பதிந்தமைக்கும்......

தொடர்பவன் said...

பேஷ் பேஷ் நன்னாருக்கு

Priya said...

Very very nice

Popular Posts

Blog Archive

Followers