விடைகள் இல்லா வினவுகள்

நிறையத்தான் படித்திருக்கிறேன்.

நிரம்ப கேள்வி ஞானமும் பெற்றிருக்கிறேன்.

வானத்தின் கீழான அத்தனை விடயங்களின் மீதான என்னுடைய அனுமானங்களை பலர் வியந்து தான் இருக்கின்றனர்.

இப்படி என்னை பற்றியான பல பிம்பங்கள், நான் விரும்பியோ விரும்பாமலோ என்னை சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

"நான் யார்" என்ற ஆகப்பெரிய "உட்கண்" கொண்டு காணவேண்டிய ஆன்ம ரீதியான கேள்விகளை கூட சில சமயங்களில் அனாயசமாக சமாளித்திருக்கிறேன்.

தொழில் முறை சம்பாஷணைகளிலும் பரிபாஷைகளிலும் முடிந்த அளவிற்கு முதன்மையானவனாகவே இருந்திருக்கிறேன்.

அத்தனை பெரிய எனது அகந்தையை நொடிப்பொழுதில் தகர்த்து தூக்கி எரிந்தது எனது மூன்று வயது குழந்தையின் கேள்விகள் ......

அப்பா,

நீங்க என்ன பண்றிங்க ???
உங்க தலைல ஏம்ப்பா முடி இல்லை???
ஏம்பா நிலாவை எத்தனை தடவை கூப்பிட்டாலும் கீழே வரவே மாட்டேங்குது!!!!
நீங்க ஏம்ப்பா கருப்பா இருக்குறீங்க????

இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு என்னிடம் எப்பொழுதுமே பதில் இல்லை,அகந்தை நொறுங்கிய ஒரு சிறு புன்னகை தவிர்த்து.........

0 comments:

Popular Posts

Blog Archive

Followers