துரத்தல்.........? துறத்தல்...?

சகலத்தையும்

சகிக்காது,

ஓடி ஒளியும்

கோழை போல்

துறப்பதற்கு

ஏதும் இல்லாத போதும்,

துறப்பது போல

துறவற

நாடகம் கொள்ளுவது துறவா...?

இல்லறத்தை

அனுபவித்து

சுக துக்கம் அறிந்து

இதனூடே சுகித்து

இதனின் வேரோடு

உறவு கொள்ளாது,

சமரிட்டு

சாம்ராஜியங்கள்

சேகரித்து

வெற்றி தோல்வி

சமன் செய்து

விரும்பாது விரும்பி,

இல்லாமல் இருந்து,

துறப்பதற்கு எல்லாம் இருந்தும்...

மனதில் இருந்து துரத்தலே துறவோ....???

சின்னஞ்சிறு
துவேசமும்
என்னை
சினம் கொள்ள
செய்கிறது!!
புகழ்
என்னை
போதை
கொள்ள செய்கிறது!
என்னிடம்
இல்லாததை
பிறரிடம் காணும்
பொழுது
பொறாமை கொள்கிறது!!!
அழகு
ஆளுமை படுத்த நினைக்கிறது!!
சில நேரம்
பிறர்
துன்பம்துடைக்க
விளைகிறது!!
காமமும் தலைக்குஏறுகிறது
கடவுளும்கண்ணை மறைக்கிறது
உறவும் உசுப்பெற்றுகிறது
துறவும் துரத்துகிறது!!!!
என்னுள்ளே
சகலமும்
சகல,சமவிகிதமாய்
சந்ஜாரித்து கொண்டிருக்க
"விட்டுவிடுதலை"
பற்றுகிறது
மனம்.
இதில்
எதை "விடுவது"
என்னில்
இருக்கும்
எதை விட.........?
என்னையே விடவா........????.....

********************************************************************************************
விட்டு,விடுதலையாகி.......
பிணைப்புகள்,
பிணக்குகள்,
சங்கடங்கள்,
சடங்குகள்,
வஞ்சங்கள்,
வக்கிரங்கள்,
வாதங்கள்,
பூசல்கள்,
என
என்னுள்
முகாமிட்டுள்ள
முகங்கள்?
வாடகை முகங்கள்
அனைத்திலிருந்தும்
விட்டு விலகி
விடுதலையாகி
நீராய்...
நெருப்பாய்....
மலையாய்....
வானாய்....
வெளியாய்....
ஆடாய்.....
மாடாய்.....
ஆறை மறந்த எழாய்.....
பிரபஞ்சத்தின்
பின் வெளியில்
பித்தனாய்,
புத்தனாய்,
நாபிக்குள் இருக்கம்
நானாய்
சுகிக்க ஆசை!!!
வல்லமை தாராயோ....?
என்
சூனியத் தாயே...?

0 comments:

Popular Posts

Blog Archive

Followers