Showing posts with label அறியாமையே பரமானந்தம். Show all posts
Showing posts with label அறியாமையே பரமானந்தம். Show all posts

அறியாமையே பரமானந்தம்

கடவுள் இருக்கின்றான்
என்றனர்
ஒப்புக்கொண்டேன்.
இல்லை என்றனர்
ஒப்புக்கொண்டேன்.
இருக்கிறானா, இல்லையா
என்பது குழப்பமானது என்றனர்
அதையும் ஒப்புக்கொண்டேன்.
இறுதியில்
நீ தான் கடவுள்
என்றனர்
அதையும்ஒப்புக்கொண்டேன்.
உண்மையைஉணராது
கடன் வாங்கிய
போதனைகளைஒப்புக்கொண்டேன்.
பின்பு தான்உணர்ந்தேன்.....
ஒப்புக்கொள்வது
என்பது எளிது
ஏனெனில்
நான்
ஆராய்ந்து சிரமப்பட
தேவை இல்லை.
எனது
அறியாமையை ஒப்புக்கொண்டேன்
இப்பொழுது
சின்னதாய் கிரணம் தெரிகிறது
அதிலே இருக்கிறேன்.

Popular Posts

Blog Archive

Followers