Attention Please - Malayalam Movie



கமல் ஹாசன் :- 

ரேடியோக்களில் வருகின்ற எண்டெர்டெயின்மெண்ட்களில் கதை சொல்லல் மற்றும் கதை சொல்லிகளின் பங்கு மிக வலுவானதாக இருக்கும் என்று ஏறத்தாழ 20 -25 வருடங்களுக்கு முன்னரே திரு.கமல் ஹாசன் அவர்கள் கட்டியம் கட்டிச் சொன்னார். 
பாட்காஸ்ட் ( Podcast ) என்கின்ற ஒரு தொழில்நுட்பம் பெரும்புரட்சிக்கு வித்திட்டிருக்க வேண்டியது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, பாட்காஸ்ட் எனப்படும் ஆன்லைன் ரேடியோக்கள் வெகுவாக வெகுஜன மக்களிடம் எடுபடவில்லை! 

சாருநிவேதிதா:- 

தமிழ் பத்திரிக்கைகளில் மூன்றம் தர கிசுகிசுக்களில் கூட ஒரு எழுத்தாளனைப் பற்றியோ அல்லது இலக்கியவாதி பற்றியோ எந்த பத்திரிக்கையாளரும் எழுதுவதில்லை என்று குறைபட்டுக்கொண்ட செய்தியை அண்மையில் படிக்க நேர்ந்தது! 

இலக்கியவாதிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் கதை சொல்லிகளுக்கும் இந்த சமூகத்தில் கிடைக்கின்ற மரியாதை, இழுக்கு, ஒவ்வாமை, நிராகரிப்பு, தீண்டத்தகாத தன்மை இவற்றைப்பற்றிய நீண்ட நெடும் தொடர் விவாதங்கள் ஆங்காங்கே நடைபெறுவதை சமூக வலைத்தளங்களின் வருகைக்குப்பின் குறிப்பாக நிறைய காண நேரிடுகிறது. 


அட்டென்சன் ப்ளீஸ் மலையாளத் திரைப்படம்: 
ஜித்தின் ஐசக் தாமஸ் எழுதி இயக்கியுள்ள "Attention Please" என்கிற மலையாளத் திரைப்படத்தை நெட்ப்ளிக்ஸில் ரிலீஸிட்டிருக்கின்றார்கள். 

ஐந்து நண்பர்களின் பேச்சுலர் லைஃப் வாழும் வீட்டில் துவங்கும் காட்சியமைப்பு ரொம்ப ஸ்லோவாக டாகுமெண்டரி போல நகர்கிறது. 

ஆனாலும் ஆரம்பம் முதலே கதையும் இயக்குநரும் நம்மை அவரின் "GRIP"ப்புக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். 

என்னதான் சொல்ல வர்றாய்ங்கன்னு பாத்துருவோம்னு விடாம பாத்தா, கரெக்டா படத்தின் பாதியில் நண்பர்களில் ஒருவரை இன்னொருவர் கொன்று விடுகிறார். 

அந்த ஸீனில் மொத்தமாக சீட்டின் நுனியில் நம்மைக் கொண்டு வந்து உட்கார வைத்து விடுகிறார் இயக்குநரும் கதாசிரியருமான ஜித்தின் தாமஸ். 

நண்பர்கள் அனைவரும் சினிமா கனவு கொண்டு அது நிறைவேறாமல் எதோ ஒரு தொழிலை செய்துகொண்டிருக்கின்றார்கள். 

அதில் எழுத்தாளன் மட்டும் விடாமல் கதை எழுதிக்கொண்டே இருக்கின்றான். 

ஒரு நாள் சரக்கு அடிக்க அனைவரும் உட்காரும் பொழுது அவனை ஊறுகாயாக ஆக்கலாம் என்று அவனிடம் கதை கேட்கிறார்கள். 

ஹரி என்கின்ற அந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் விஷ்ணு கோவிந்தன் அப்பாவி போல துவங்கி அதகளம் பண்ணுகிறார். 

நிஜமாகப் பார்த்தால் ஒரு படத்தில் படத்தின் இயக்குநரின் வேலை 50% தான் என்பதை குறியீடு மூலம், படத்தின் இண்டர்வெல் காட்சியில் ஜித்தின் என்று டைரக்டரின் பெயர் கொண்ட கேரக்டர் இறந்து விடுகிறது. கேமராமேன் ஹிமல் படம் முழுவதும் தேவைப்பட்டாலும் அவர் கதாசிரியரைச் சுற்றி அவருக்கு கீழே தான் என்பது போல அமைக்கப்பட்டிருக்கும் கதையமைப்பு பல உள்ளடுக்குகளை கொண்டிருக்கின்றது. 

திரைப்படத்துறையில் கதாசிரியரை ஒரு தீண்டத்தகாத கீழ் சாதி போல தான் ஒதுக்கி நிராகரிக்கிறார்கள் என்பதை நெற்றியடியாகச் சொல்கிறது படம். 

ஆனால் டாக்குமெண்டரி போல ஆரம்பித்த படம் பெரும் எழுச்சி கொண்டு பரபரவென நம்மைப் பற்றிக்கொள்ளும் " என்ன நடக்கப்போகுதோ " என்கிற பதட்டம் சபாஷ் போட வைக்கின்றது. 
ஹரி சொல்லும் அனைத்து கதைகளைப் போலவே இப்படமும் ரொம்ப Unsettling காகவே முடிந்து விடுகிறது. 

கதை சொல்லியின் முக்கியத்துவத்தை காட்டுவதற்காகவே அவர் சொல்லும் எந்தக் கதைக்கும் விஷுவல்ஸ் இல்லை. 

பாட்காஸ்டில் சொல்லப்படும் கிரைம் ஸ்டோரிஸ் போலவே இருக்கின்றது, ஆனாலும் போரிங்காக இல்லாதது திரைக்கதை யுக்திக்கு கிடைத்த வெற்றி . 

மலையாள சினிமாவில் எழுத்தாளர்களின் பங்கு முக்கியமானது என்பதை கமல் ஹாஸன் முதல் சாருநிவேதிதா வரை உறுதிபடுத்திச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 

இப்படம் அதை திரையில் உறுதிப்படுத்தியிருக்கிறது.

அது என்னடா எல்லா ரிவ்யூயர்ஸும் "MUST WATCH" அப்ப்டின்னு சொல்றாங்கன்னு கிண்டல் அடிப்பது போல இப்படத்தையும் ஆடியன்ஸின் "அட்டென்ஸன் ப்ளீஸ்" என்று சொல்லியிருக்கிறார்கள். 

எனக்கு ஏனோ ஒழிவுதிவசண்டே கழி படம் நினைவுக்கு வந்தது. 

கண்டிப்பாக பார்க்கலாம்! 

#MovieReviews 

#AttentionPlease #Netflix #kamalhaasan #OTT #charunivethitha

0 comments:

Popular Posts

Blog Archive

Followers