பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு சில காரணங்கள்! 

பாண்டியர்களின் ஆபத்துதவிகளின் ராஜதந்திரம் மற்றும் அவர்களின் அறம்! 

ஒரு பெரிய ஹீரோக்கு நல்ல வில்லன் அமையனும். 

இந்தக்கதையிலும் சரி திரைப்படத்திலும் சரி, பழுவேட்டரையர்கள், பாண்டிய குல ஆபத்துதவிகள், மற்றும் அவர்களின் திறமை தான் முக்கிய கருத்தாக அமைகின்றது. 

சோழ அரச குடும்பம் ஒரு போர்க்குடும்பமாகத்தான் அமையப்பட்டிருக்கிறது. 

நாட்டின் நிதி பாதுகாப்பு எல்லாமே பழுவேட்டரையர்கள் தான்! 

அரச குலத்தவர்கள் சும்மா எதோ வேட்டக்காரர்கள் மாதிரி போர் செஞ்சுருக்காங்க 😜 

ஸோ முழுமுதற்காரணம் பாண்டியர்களின் விட்டுக்கொடாத தன்மை இந்நாவலிற்கும் திரைப்படத்திற்கும் சோழற்களுக்கும் வலு! 

இரண்டாவது, மணிரத்தினம் 

வந்தியத்தேவனின் பாயிண்ட் ஆஃப் வியூவில் கதை சொல்லியிருக்கும் கல்கிக்கு போட்டியாக ஒரு "குட்டி கல்கியாக" தன்னுடைய பாயிண்ட் ஆஃப் வியூவிலிருந்து கதை சொல்லியிருக்கிறார். 

மணி ரத்தினத்தின் தலையில் வைரமும் முத்தும் இல்லாத  ஒரு மகுடம் ! வாழ்த்துக்கள்! 

மூன்றாவது, ஜெயமோஹன்! 

ஜெயமோஹன் என்று சொன்னாலே எனக்கு குமட்டிக்கொண்டு வரும் என்ன காரணமோ தெரில! 

திரு. கமல் ஹாசன் அவர்களிடம் பலமுறை ஜெயமோஹன் குறித்து சர்ச்சையிட்டிருக்கின்றேன்! 

ஆனால் முதல் முறையாக அவருக்கு ஒரு லால் சலாம் போடுகிறேன்! பொன்னியின் செல்வனின் ஜெயமோஹனுக்காக! 

நான்காவது, ஐஸ்வர்யா ராய் என்கின்ற தேவதைக்கு முன் திரிஷாவே திணறினாலும் நம்மை கொள்ளை கொள்கிறார். ஆனால் அவரையும் தாண்டி பூங்குழலியாக ஐஸ்வர்ய லெக்‌ஷ்மி! 

ஜகமே தந்திரத்திலேயே மிரட்டியிருப்பார் அர்ச்சனா 31 நாட் அவுட் படம் பார்த்து நான் அவுட்டாகி இருந்தேன்! 

இந்தப் படத்தில் அவரைப் பார்த்த பிறகு.......

பொன்னியின் செல்வி பூங்குழலி ஐஸ்வர்ய லக்‌ஷ்மிக்கு அனேக அன்பு! 
ஐந்தாவது, 

எடிட்டிங்! 

போரடிக்காம இருந்த ஒரு நாவலை போரடிக்காத திரைக்கதை, போரடிக்காத காட்சியமைப்புகள் என்று இருந்தாலும், அதை மிக நேர்த்தியாக எடிட் செய்த ஶ்ரீகர் ப்ரசாத்திற்கு தான் முழு க்ரெடிட்டும் போய் சேரனும்! அது தான் முறை! 

குறை .

இ(ம்)சை

ஜெயமோஹன் என்கின்ற எழுத்தாள விசம்!

'வைரமுத்துவை பயன்படுத்தாதற்கு காரணம் இளையவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகத்தான். 

புதுபுதுசா நிறையபேர், 
தமிழ் சார்ந்து ரிசர்ச் செய்யும் நிறைய ஆளுமைகள் இருக்கிறார்கள் அவர்களை பயன்படுத்தத்தான்' என்று மணிரத்தினம் தெரிவித்து இருக்கின்றார். 

புதுசு புதுசா ரிசர்ச் செய்யும் ஆளுமைகள் என்று அவர் குறிப்பிடுவது "ஜெயமோகன் மற்றும் அவரது விசிலடிச்சான் குஞ்சு ரசிகர்கள்" என்பதை நினைத்துப்பார்க்கவே "உவ்வே" வருகிறது. 
இந்த மேட்டுக்குடித்தனத்தை மேட்டிமைத் தனத்தை நாம் "ஆரியகுடுமி" என்று எதேச்சையாகவும் எதார்த்தமாகவும் விட்டுவிட முடியாது! 

திராவிடம் மற்றும் தமிழ் இலக்கியங்களை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுப்போம், 

"தீ பரவட்டும்" என்று பெரும் உணர்ச்சி மிகு போராட்டத்தை கையிலெடுத்து விளையாடினார். 

இன்றைய நவீன தமிழ் இலக்கிய எளைஞர்கள் தயவு கூர்ந்து அந்த அறிவுசார் விவாதங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும். 

இல்லாவிட்டால்,வைரமுத்து பாட்டெழுதாதை எதோ #MeToo  போராட்ட நாயகி சின்மயி, மணிரத்தினம் ஜெயமோகன் போன்றவர்களின் உச்சகட்ட தியாக வேள்வி தான் காரணம் என்றும், 

பெண்களை வெறும் பாலியல் பலாத்காரம் செய்ய பயன்படுத்தும் "ஸ்த்ரி லோலன்களை" ஒதுக்கித்தள்ளுவோம் என்கின்ற வகையில் மட்டுமே பார்க்கப்படும். 

தமிழ் மன்னர்களையும் திராவிடத்தையும்  சொந்தம் கொண்டாடத் துடிக்கும் இந்த ஆரியக்குடுமிகள் பாடுவது பழைய புராணம் தான்! 

இதே பழைய புராணக்கதையில் உருவானது தான் இளையராஜாவை ஒதுக்கியதும் (பா.ரஞ்சித் போன்ற அம்பேத்கரிய வியாதிகளும், சங்கி மங்கி என்றால் என்ன என்பதை கூட கூகுளில் தேடிப்படிக்கும் திராவிடக்குஞ்சுகளும் இளையராஜாவை ஒதுக்குவது வேற விசயம்) 

சரி விசயத்துக்கு வருவோம்.

தமிழ் இலக்கிய பாலில் மெல்ல மெல்ல நஞ்சைக்கலக்கும் ஜெயமோகன் மற்றும் அவரது குஞ்சுகளும் தமிழ் சினிமாவில் இலக்கிய வேலை பார்ப்பது யாருக்காக என்று எண்ணிப்பார்த்தாலே நமக்குப் புரிந்து விடும். 

 ஏறத்தாழ  அவாளும், அய்யங்காரும், திருமலை நாயக்க மன்னர் பரம்பரை என உயர்சாதி குடுமி ஆடும் இடங்களில் மட்டுமே பணிபுரிவர். 

நான் கடவுள் பாலா எனும் ஆதிக்கசாதி உணர்வு கொண்டவர் என்பதும் அனைவரும் அறிந்ததே! 

இப்படி மேட்டுக்குடியினராகப் பார்த்து பார்த்து சேவகம் செய்ய்ம் ஜெயமோஹனை என்ன சொல்வது. 

இது குறித்து யாரேனும் ரிசர்ச் செய்தால் தமில் சிணிமாவும் இழக்கியமும் வாலும்..... 

ஸோ மணிரத்தினங்கள் எத்தனைதான் கட்டியம் கட்டினாலும் வைரமுத்துக்களை ஒன்றும் செய்ய இயலாது. 

"ராவணனுக்கும்"  "கடலுக்கும்" இருக்கின்ற வித்தியாசத்தை கொள்கை ரீதியாக புரிந்து கொள்ள முடியாதவர் இல்லை மணிரத்தினம் என்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில், 

ஜெயமோகன் போன்ற எழக்கிய விச ஜந்துக்களை ஒதுக்கி மீண்டும் சினிமாவிற்கான விழுமியங்களை எடுத்து பணியாற்றுங்கள். 

அய்யர், அய்யங்கார், பிள்ளைவாள், செட்டியார், முதலியார், தேவர், கவுண்டர், மற்றும் அனைத்து இடைசாதியினருக்கும், மேலும் பள்ளர் பறையர் என இதைப்படிக்கும் அனைத்து சாதி நண்பர்களுக்கும் இக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன். ஏனெனில் ஜெயமோகனை கொண்டாடுவது தமிழுக்கு இழைக்கப்படும் ஒரு துரோகமும் வன்மமுமாகவே பார்க்க வேண்டும். 

பின் குறிப்பு: 

" பொன்னி நதி பாக்கனுமே பொழுதுக்கொள்ளே"

Attention Please - Malayalam Movie



கமல் ஹாசன் :- 

ரேடியோக்களில் வருகின்ற எண்டெர்டெயின்மெண்ட்களில் கதை சொல்லல் மற்றும் கதை சொல்லிகளின் பங்கு மிக வலுவானதாக இருக்கும் என்று ஏறத்தாழ 20 -25 வருடங்களுக்கு முன்னரே திரு.கமல் ஹாசன் அவர்கள் கட்டியம் கட்டிச் சொன்னார். 
பாட்காஸ்ட் ( Podcast ) என்கின்ற ஒரு தொழில்நுட்பம் பெரும்புரட்சிக்கு வித்திட்டிருக்க வேண்டியது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, பாட்காஸ்ட் எனப்படும் ஆன்லைன் ரேடியோக்கள் வெகுவாக வெகுஜன மக்களிடம் எடுபடவில்லை! 

சாருநிவேதிதா:- 

தமிழ் பத்திரிக்கைகளில் மூன்றம் தர கிசுகிசுக்களில் கூட ஒரு எழுத்தாளனைப் பற்றியோ அல்லது இலக்கியவாதி பற்றியோ எந்த பத்திரிக்கையாளரும் எழுதுவதில்லை என்று குறைபட்டுக்கொண்ட செய்தியை அண்மையில் படிக்க நேர்ந்தது! 

இலக்கியவாதிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் கதை சொல்லிகளுக்கும் இந்த சமூகத்தில் கிடைக்கின்ற மரியாதை, இழுக்கு, ஒவ்வாமை, நிராகரிப்பு, தீண்டத்தகாத தன்மை இவற்றைப்பற்றிய நீண்ட நெடும் தொடர் விவாதங்கள் ஆங்காங்கே நடைபெறுவதை சமூக வலைத்தளங்களின் வருகைக்குப்பின் குறிப்பாக நிறைய காண நேரிடுகிறது. 


அட்டென்சன் ப்ளீஸ் மலையாளத் திரைப்படம்: 
ஜித்தின் ஐசக் தாமஸ் எழுதி இயக்கியுள்ள "Attention Please" என்கிற மலையாளத் திரைப்படத்தை நெட்ப்ளிக்ஸில் ரிலீஸிட்டிருக்கின்றார்கள். 

ஐந்து நண்பர்களின் பேச்சுலர் லைஃப் வாழும் வீட்டில் துவங்கும் காட்சியமைப்பு ரொம்ப ஸ்லோவாக டாகுமெண்டரி போல நகர்கிறது. 

ஆனாலும் ஆரம்பம் முதலே கதையும் இயக்குநரும் நம்மை அவரின் "GRIP"ப்புக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். 

என்னதான் சொல்ல வர்றாய்ங்கன்னு பாத்துருவோம்னு விடாம பாத்தா, கரெக்டா படத்தின் பாதியில் நண்பர்களில் ஒருவரை இன்னொருவர் கொன்று விடுகிறார். 

அந்த ஸீனில் மொத்தமாக சீட்டின் நுனியில் நம்மைக் கொண்டு வந்து உட்கார வைத்து விடுகிறார் இயக்குநரும் கதாசிரியருமான ஜித்தின் தாமஸ். 

நண்பர்கள் அனைவரும் சினிமா கனவு கொண்டு அது நிறைவேறாமல் எதோ ஒரு தொழிலை செய்துகொண்டிருக்கின்றார்கள். 

அதில் எழுத்தாளன் மட்டும் விடாமல் கதை எழுதிக்கொண்டே இருக்கின்றான். 

ஒரு நாள் சரக்கு அடிக்க அனைவரும் உட்காரும் பொழுது அவனை ஊறுகாயாக ஆக்கலாம் என்று அவனிடம் கதை கேட்கிறார்கள். 

ஹரி என்கின்ற அந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் விஷ்ணு கோவிந்தன் அப்பாவி போல துவங்கி அதகளம் பண்ணுகிறார். 

நிஜமாகப் பார்த்தால் ஒரு படத்தில் படத்தின் இயக்குநரின் வேலை 50% தான் என்பதை குறியீடு மூலம், படத்தின் இண்டர்வெல் காட்சியில் ஜித்தின் என்று டைரக்டரின் பெயர் கொண்ட கேரக்டர் இறந்து விடுகிறது. கேமராமேன் ஹிமல் படம் முழுவதும் தேவைப்பட்டாலும் அவர் கதாசிரியரைச் சுற்றி அவருக்கு கீழே தான் என்பது போல அமைக்கப்பட்டிருக்கும் கதையமைப்பு பல உள்ளடுக்குகளை கொண்டிருக்கின்றது. 

திரைப்படத்துறையில் கதாசிரியரை ஒரு தீண்டத்தகாத கீழ் சாதி போல தான் ஒதுக்கி நிராகரிக்கிறார்கள் என்பதை நெற்றியடியாகச் சொல்கிறது படம். 

ஆனால் டாக்குமெண்டரி போல ஆரம்பித்த படம் பெரும் எழுச்சி கொண்டு பரபரவென நம்மைப் பற்றிக்கொள்ளும் " என்ன நடக்கப்போகுதோ " என்கிற பதட்டம் சபாஷ் போட வைக்கின்றது. 
ஹரி சொல்லும் அனைத்து கதைகளைப் போலவே இப்படமும் ரொம்ப Unsettling காகவே முடிந்து விடுகிறது. 

கதை சொல்லியின் முக்கியத்துவத்தை காட்டுவதற்காகவே அவர் சொல்லும் எந்தக் கதைக்கும் விஷுவல்ஸ் இல்லை. 

பாட்காஸ்டில் சொல்லப்படும் கிரைம் ஸ்டோரிஸ் போலவே இருக்கின்றது, ஆனாலும் போரிங்காக இல்லாதது திரைக்கதை யுக்திக்கு கிடைத்த வெற்றி . 

மலையாள சினிமாவில் எழுத்தாளர்களின் பங்கு முக்கியமானது என்பதை கமல் ஹாஸன் முதல் சாருநிவேதிதா வரை உறுதிபடுத்திச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 

இப்படம் அதை திரையில் உறுதிப்படுத்தியிருக்கிறது.

அது என்னடா எல்லா ரிவ்யூயர்ஸும் "MUST WATCH" அப்ப்டின்னு சொல்றாங்கன்னு கிண்டல் அடிப்பது போல இப்படத்தையும் ஆடியன்ஸின் "அட்டென்ஸன் ப்ளீஸ்" என்று சொல்லியிருக்கிறார்கள். 

எனக்கு ஏனோ ஒழிவுதிவசண்டே கழி படம் நினைவுக்கு வந்தது. 

கண்டிப்பாக பார்க்கலாம்! 

#MovieReviews 

#AttentionPlease #Netflix #kamalhaasan #OTT #charunivethitha

சுயமரியாதைக்கு நன்றி...

எம் இனம் காத்திட எழுந்தருளிய ஒளிஞாயிறு.....

அறியாமையை அடித்தொழிக்க வந்த ஞானச்சூரியன்.....

இவனைத் திட்டி இன்றும் வயிறு வளர்க்கும் பலருக்காக மூத்திரப்பையைச் சுமந்து நித்திரையின்றி யாத்திரை செய்த பகுத்தறிவுப்பகலவன்.....

சுய சிந்தனைக்காரன்!!

பொய்மையான கட்டமைப்புச்சுமைகளையும், தீமையான தீண்டாமைச்சுவர்களையும், பெண்ணடிமை கயமைத் தனத்தையும் 
சுக்கு நூறாய் நொறுக்கி உடைத்தெறிந்த பேரறிவுப்பெரியோன்! 

புதிய சிந்தனைக்காரன்!! 

தேசியம், புனிதம், விசுவாசம், பக்தி, கடவுள், பூசை, புனஸ்காரம், என எல்லாப் புனிதக் கற்பனைகளையும் காலில் போட்டிருந்த செருப்பால் அடித்துத்துவைத்த சுயமரியாதைச் சூரியன்...... 

எங்கள் தாத்தன்! 


நாங்கள் உட்கார்ந்த இடத்தை மாட்டுப்பீயையும், மாட்டு மூத்திரத்தையும் தெளித்து சுத்தமாக்கியவர்களை கண்டம் விட்டு கண்டம் ஓட வைத்தவன்....

மானமும் அறிவும் மட்டுமே உனக்கு அழகு என்று தலைமுறை தலைமுறையாய் குனிந்திருந்த தமிழனை தலைநிமிரச் செய்த 
எங்கள் குலப்பெரியோன்.....

ராமசாமி சொல்லிட்டான்னு ஒடனே கேட்டுறாத, நீ தேடி உனக்கு சரின்னு படுதா என்று தமிழனை ஞானத்தை நோக்கி திரண்டு ஓடச்செய்த திராவிடத் தந்தையவன்!

பெரியார் இல்லாட்டி படிச்சு இருக்க மாட்டீங்களோ?பெரியாருக்கு முன்னாடி தமிழன் முட்டாளா இருந்தானா?  "பெரிய மயிறு இந்தப் பெரியார் என்று சொல்லிச் சிரிக்கும்" பல மேட்டுக்குடிச் சீமான்களையும் "பனையேறி"  கீழே இறக்கி, அடித்து படிக்க வைத்தப் பண்பாட்டுச் சீர்திருத்தியச் செம்மல்.... 

மானுடத்தின் மகுடம் அவன்!

"திராவிடன்" "தமிழன்னு" சொல்லி சொல்லியே எங்கள இன்னும் "பள்ளனாய் பறையனாய்"  வச்சு இருக்காய்ங்க என்று சொல்லிப் புலம்பும் ரஞ்சித் பஞ்சமர்களையும் அதட்டி அறிவு வளர்த்த பெருந்தாத்தன்...

சூத்திரனின் அறிவுச் சூத்திரம் அவன்! 

ஆண்ட சாதி, அரச பரம்பரை, வீர சைவம், வன்னிய குல சத்திரியன், தேவண்டா என்று சொல்லிய எல்லாத்தையும், பாப்பானப் பொறுத்தவரை நீ வெறும் சூத்திரப்பயலும் தேவுடியப்பயலும் தாண்டா என்று புட்டத்தில் அடித்து முன்னேறச் செய்த கரும்புரட்சிக்காரன்

கருப்புச் சட்டைக்காரன்!! 

அவனுக்கு நாம வேணாம்! 
ஆனா 
நமக்கு அவன் வேணும்......

வணக்கத்தையும்  
போற்றுதலையும் பொடிப்பொடியாக்கிய சுயமரியாதைக்கு நன்றி!


@cupidbuddha

எலிசபெத் எனும் ஃபோட்டோஷாப் புன்னகை அரசி!

ராணி எலிசெபத்தின் மறைவிற்கு பின் மன்னராட்சி குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன! 

ஆனால் நாம் ஆய்வு செய்யவிருப்பது, சற்று குறைவான பொறுப்புகள் அதிகாரங்கள் பெற்றிருப்பினும் கூட மகராணி என்கின்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளவும், மன்னராட்சியினை 21 ம் நூற்றாண்டு வரை இழுத்துக்கொண்டு சென்று வந்த ஒரு ஆளுமையாக எலிசபெத் அவர்களின் பெருமையாக கூறினாலும் அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள், நஷ்டங்கள் அவமானங்கள், இழப்புகள், தோல்விகள் என்னவென்று ஆராய முற்படின் ஒன்றுமே இல்லையெனச் சொல்லலாம்! 

ஆம் ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! 

ஆனால் அதுவே உண்மை! 

ஒரு காலத்தில் சூரியனே மறையாத பெரும் எல்லைகளைக்கொண்ட இங்கிலாந்து அரச குடும்பம், இன்று ரப்பர் ஸ்டாம்ப் அளவினதாய் சுருங்கிச் சிறுத்துப் போய்விட்டது. 

உலகம் முழுதும் மக்களாட்சி மேன்மையடையத்துவங்கிய அதே காலகட்டத்தில் அதன் விளைவில் மன்னராட்சி வீழத்துவங்கியது. 

ஆனாலும் இங்கிலாந்தில் மட்டும் அரச குடும்பத்தினர் தங்கள் மாட்சிமை பொருந்திய மரியாதையை வெகு கவனமாக காப்பாற்றிக்கொண்டே வந்தனர். 

அதற்கு முக்கிய காரணம் ராணி எலிசபெத்தின் எவ்வித சலனமும், உணர்ச்சியும், உணர்வும், இல்லாத ஒரு முகமூடி அணிந்த சாவி கொடுக்கப்பட்ட ஒரு பொம்மை போன்ற ஒரு முக அமைப்பைக் கொண்டு, உலகமே அழிந்தாலும் சரி, தனது நாடும் வீடும் எக்கேடு கெட்டுப்போனாலும் சரி, எனக்கு அது குறித்து கருத்தோ கவலையோ இல்லை. 

எனக்கு எனது ராணி பொறுப்பையும் இந்த ராஜாங்கத்தை இழந்து விடாமல், வீழந்து விடாமல் கொண்டு செல்வது மட்டுமே எனது பணி என்கின்ற ஒரு மனநிலையில் தனது 96 வயதினில் ஏறத்தாழ 70 வயதினைக் கடத்தி ஓய்ந்து விட்டார் ராணி எலிசபெத் அம்மையார். 

ஒட்டுமொத்தமாக 5 அல்லது 6 முறை மட்டுமே திரையில் தோன்றி பேசியுள்ளார். அதிலும் இரண்டாம் உலகப்போர் காலத்திய அவரின் பேச்சும் அண்மையில் கொரோனா காலத்தில் நாம் மீண்டும் சந்திப்போம் என்று சொல்லியதும் இதற்கிடையில் நீண்ட மௌனத்தை உடைத்து ஒரு தாயாகவும் பாட்டியாகவும் என்று தன்னை சொல்லி டயனாவின் இரங்கல் குறித்து பேசியது மட்டுமே பெரும்பான்மையான மக்களுக்கு நினைவில் நின்றிருக்கும். 

இவற்றைத் தவிர ராணி எலிசபெத் அம்மையார் இது வரை உலகின் பெரும் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் தனது போட்டோஷாப் செய்யப்பட்ட புன்சிரிப்பினையே பதிலாக தந்தார். 
இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளக்கூடியது என்னவெனில், தனது ராணிப்பட்டத்தையும் ப்ரிட்டிஷ்ஷின் மன்னராட்சியினையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தன்னிடம் இப்புன்னகையைத் தவிர்த்து வேரொன்றுமில்லை என்பது தான். 

தனக்கு கொடுக்கப்பட்ட வேலையினை சிறப்பாக செய்து முடித்து இயற்கையடி சேர்ந்தும் விட்டார். 

மன்னாராட்சி முறையில் ஒற்றைக் குடைக்குள் உலகத்தை அடைக்க நினைத்த இங்கிலாந்து அரசிற்கும், சர்வாதிகாரத்தின் மூலம் உலகை தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயன்ற ஹிட்லருக்கும் சற்றும் குறைவில்லாமல் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் தற்பொழுது நடைபெறும் ஆட்சிக்கும் பெரிதான வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை! 

ஒரே நாடு, 
ஒரே ரேசன்
ஒரே மொழி
ஒரே கல்வி
ஒரே கட்சி என்று ஒன்றிய அரசின் அடாவடிக் கொள்கைகள் அச்சமூட்டுபவையாக இருந்தாலும் ஆபத்து நிறைந்தவையாக இருந்தாலும் அழியப்போவதென்பது வரலாறு நமக்கு சொல்லும் உண்மை! 

ஜார்க்கண்டிலும், கோவாவிலும் இன்ன பிற மாநிலங்களிலும் எதிர்கட்சியினரை விலைபேசி வாங்கும் "ஆப்பரேசன் லோட்டஸ்" எனும் அதி பயங்கரமான ஜனநாயக விரோதத்தனமான போக்கு இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் போக்கு. 

சூரியன் மறையா எல்லை கொண்ட ராஜ்ஜியங்களே மலையேறி மண்ணாகிப் போய்விட்டது. 

குளத்துத் தாமரைகள் பாவம் ஆகாயச்சூரியனால் சுட்டெறிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை! 

வாழ்க மக்களாட்சி
வளர்க மக்கள்! 

அரசியல் குறள் 


Popular Posts

Blog Archive

Followers