நாத்திகமா...................?


மனிதன் படைத்ததில்
அவனை விட ஒன்றுமுயர்வில்லை
எனில்
கோயில்
சிலைகள்
முன் மண்டியிடல்........?



தானே
தோன்றிய
இறைவன் இருக்கையில்
தானே
தோன்றிய
மனிதன் இருக்க முடியாதா...?

கோயில்
என்பது
வெறும் குப்பைதொட்டி!!!!
ஆம்....
மனிதன்
தன்
மனதிலுள்ள
குற்றங்களை
பாவங்களை
அசிங்கங்களை
கொட்டித்தீர்க்கும்
குப்பைத்தொட்டி

நீங்கள்
எத்தனை
சவங்களின்
மேல்
ஆலயங்களை எழுப்பினீர்கள்
என
சாமியிடம்
சொல்லவே சொல்லாதீர்
அவன்
திருப்பள்ளி எழவேமாட்டான்...

உருவாக்கியது
அனைத்தும்
அழிந்து போகுமெனின்
எம்மால்
உருவாக்கப்பட்ட
இறைவனும்
அழிந்து போய்விடுமோ???

திருவிளையாடல்
அவதாரம்
மறைநூல்அனுப்புவது...
அவ்வப்பொழுது ஆகாசவானியில்
கட்டளையிடுவது...
தீர்ப்பு நாள்
என்று பயமுறுத்துவது. ...
இதை தவிர
வேறேதுனும்
வேலை உள்ளதா?
இறைவனுக்கு...........

கண்ணுக்கு தெரியாத
கருத்து ஒன்று
கடவுள்
என்ற பெயரில்
தினமும்
என்னை
கண்காணித்து கொண்டே
இருக்கிறதாம்......
வேறு ஏதும் வேலை
இன்றி.......
போக வேண்டியது தானே
எங்கேனும்.....
தேவையற்ற
என்னின்
ரகசிய அந்தரங்களை
நோன்டி கொண்டும்
அதற்கு
மதிப்பெண்கள்
போட்டுக்கொண்டும்...
தீர்ப்பு நாள்
அன்று
தண்டனை தரவும்
சீ...
தேவை இல்லை
போ....

என்னை படைத்து
பிறகு
என்னைஅழ வைத்து
சிரிக்க வைத்து
தெரு நாயாய்
திரிய வைத்து
பாவ புண்ணிய
தராசில் நிறுத்தி
பின் என்னை
சாகடித்து
பின்
மீண்டும்
அவனிடம்அழைத்து.......
-----------------------
இந்த கடவுள்
என்ன மன நோயாளியா?


இறைவன்"
என்று
அழைப்பதிலே
தெரிகிறது
இது
ஆணாதிக்க மனமென்று...
"இறைமை"
என்று அழை.....
இருந்தால்......?????

கிருஷ்ணன்
இல்லையென்று
கிருத்துவனும்,
கிறிஸ்து
இல்லையென்று
மகமதியனும்,
அல்லா
இல்லையென்று
அந்தணனும்
கூறுகையில்
மூன்றுமே
இல்லைஎன்கிறேன்
நான்!!!.

0 comments:

Popular Posts

Blog Archive

Followers