யோகி!!!!!

குழந்தைகளில் அனைவரும் பிடிவாதம் பிடிப்பது போலவும், ஒரு பொருள் தேவையோ அல்லது ஒரு செயல் செய்ய வேண்டும் என்றாலோ அவர்கள் அதில் அதீத தீவிரமும் பிடிவாதம் பிடிப்பதும்,முரண்டு பிடிப்பதும் சில சமயங்களில் நம்ம்கு எரிச்சலூட்டுவது போல இருக்கும்,கோவம் வரும்.
நமது குழந்தை இப்படி பிடிவாதாம் பிடிக்கின்றது என்று தோன்றுகிறது....

ஆனால் இதில் குழந்தையின் தவறு ஒன்றும் இல்லை,

நமக்கு "நேரம்" என்ற ஒரு CONCEPT இருக்கின்றது,

அஹாவது இந்த பொருள் எனக்கு இப்போது கிடைக்கவில்லை என்றால் பிறகு கூட, ஒரு மணி நேரம் கழித்து அல்லது நாளையோ, நாளை மருதினமோ கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைப்பது அந்த "நேரம்" என்ற ஒரு CONCEPT தான்.

அதனால் தான் நாம் நம்மை நமது பிடிவாத குணத்தில் இருந்து சமரசப்படுத்திகொள்கிறோம்.

ஆனால் குழந்தைகள் அப்படி அல்ல.

அவர்களுக்கு அடுத்த நொடி என்ற ஒன்றே இல்லை அவர்கள் நிகழில் வாழ்கிறார்கள்.

அந்த நொடி அவர்களின் சொர்க்கம்.........

அதனால் தான் அந்த நொடியிலே அவர்களுக்கு அது வேண்டும்.

அடுத்த நொடி என்பது நிலையற்றது....அவர்களுக்கு

நிலையற்றது என்பதை விட அவர்களுக்கு இல்லை.

எனவே அடுத்த முறை உங்கள் அல்லது வேறேவேரின் குழந்தை பிடிவாதம் பிடித்தால் அது பிடிவாதம் அல்ல!!!!

அந்த நொடியில் வாழும் அந்த யோகி இந்த உலகத்தை உதைத்துக்கொண்டு எப்போதும் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றது.....

அந்த நொடியில் வாழுங்கள் என்று ......

நாம்தான் அவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றிக்கொண்டே நம்மை தண்டித்துக்கொண்டே இருக்கிறோம்.......

0 comments:

Popular Posts

Blog Archive

Followers