நிதர்சனம்

இன்னும்

80 கோடி மக்கள் தினமும் ஒரு வேலை மட்டும் உணவு அருந்தி விட்டு வாழ்கிறார்கள்.

இளைஞ்ர்களுக்கு வேலை இல்லாமல் தவறான பாதையை நோக்கி போகிறார்கள்.

பெண்கள் முதிர் கன்னிகளாவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

உத்தரபுரத்தில் சாதிசுவர்கள் இடிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன....

கோயில்களில் செருப்புகளோடு சேர்ந்து இன்னும் சில மனிதர்களின் அனுமதிப்பு மறுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது

அரசாங்கம் இன்னும் சனநாயகத்தை பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கின்றன....

மேதைகள் நாம் வல்லரசாகும் கனவுகளை நம்மீது திணித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இன்னும் சில வீணர்கள் பெரியாரை பத்தி பேசி வயிறும் வாயும் வளர்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..

எங்கேனும் ஓர் மூலையில் இதை போல இன்னொரு மனமும் கொதித்துக்கொண்டு என்னை தோழனாக்கிகொண்டே சுகிக்கிறது....

பின் நானும் அமைதியாய் இரவினில் நிலவினில் தூங்கிபோகின்றேன்.....

0 comments:

Popular Posts

Blog Archive

Followers