Google+ Followers

அறிவுக்கடல்.....

ஆம்.
நான் அறிவுக்கடல்தான்
பிறரின்
மிச்ச எச்சில்களில் சுகித்து
ரசித்து
வடித்துவார்த்த
நுரைகளில்
நூலோடி
சேர்ந்த
கடல்தான்
அறிவுக்கடல்தான்!!!

சாமி குத்தம்??? சாமி குத்தம்???

சாமி குத்தம்??? சாமி குத்தம்???
உண்மையில பாத்தா
இது
சாமி குத்தம் இல்லை?!?
சாமி செஞ்ச குத்தம்....?!?
ஒருவனிட்ட மலத்தை,
இன்னொருவன் அள்ளும்வகை
சமுதாய
சமச்சீர்
செய்தது
அந்த சாமி செஞ்ச குத்தம்.
அளவுக்குஅதிகமாக உணவு....,
பின் உண்னமுடியாததை
குப்பையில்
அவன்எரிய,
அதை அள்ளி திங்கவும்
இன்னொருவனை
படைச்சானே
அது சாமி செஞ்ச குத்தம்!
ஆடைக்கும்
ஐந்தாறு பெயரிட்டு
அந்த பெயருக்கு
ஆயிரமாயிரம்
சில்லறைகளை
அள்ளி வீசும்போது,
குன்டித்துணி
கோவணம்
கூட இல்லாமல்செய்தது
சாமி செஞ்ச குத்தம்.
எல்லாத்தையும்
இப்படி குத்தமாவே செஞ்சுட்டு
இது எல்லாம்
போன சென்மத்து
குத்தத்துக்கு பரிகாரம்னு
சொன்னானே!!?
இதுதான்
அந்த சாமி செஞ்ச பெருங்குத்தம்
போதும் டா சாமிபோதும்.

மனிதம்

லாரி மோதி

நடுரோடிலுள்ள

நாய் சிதறலில்

மன்றாடுகிறது

மனிதம்

நன்றி

என் மூலமாய்
ஜனித்து
என் மூலமாய்
சுவாசித்து
என் மூலமாய்
புசித்து
என் மூலமாய்
ரசித்தது
என் மூலமாய்
காதலித்தது
என் மூலமாய்
கலவி செய்து
என் மூலமாய்
இசைந்து
என் மூலமாய்
துவேசித்து
என் மூலமாய்
த்வம்சமாகி
என் மூலமாய்
மரித்து
என் மூலமாய்
எல்லாமுமாகிய
இறைமைக்கு நன்றி

இறை........

வருவது
அனைத்திற்கும்
"ஆம்"
சொல்லி ஏற்றுக்கொண்டாலும்
"இல்லை"
சொல்லி மறுதலித்தாலும்
"பிரம்மம்"
என்னவோ
ஆமில்லைக்கு
அப்பாற்பட்ட
இயல்புற்றத்தாகவே
இருக்கின்றது!!!


இறைவனை
காண முடியாதாம்!!!
நீர்த்துளி
கடலில்
கலப்பது போல்
இறைமையிடம்
இணைந்து விடுவதாம்!!!
கலந்த பின்
கலந்தது எது?
கலக்கப்பட்டது எது?
என்றறிய
"நான்"
இருக்க மாட்டேனே ஐயா...
என்றால்....
"நான்"
"இல்லாமையே"
இறைமை"
என்கின்றனர்.எனக்குள்ளிருக்கும்
நான்
வினவுகிறது
"நான் யார்"


என்னையே
சாளரமாய்
எண்ணி
எனைத் தேட...
சாகரமாய்த் தோன்றிட.....
கரையில்
தனியே
நான்!!!

தனியே
தன்னையே
தேடினேன்
அகிலத்தின்
அக்குளுக்குள்ளும்!!
அண்டத்தின்
பிண்டம் தான்
" நீ "
உணர்
"உன்னை"
உன்னுள்ளே, என்றது
ஞானம்!?!
உணர உணர
நானும்
மறைய...
இனி
இங்கு
யாரை தேட.....???


"நான்"
இறந்து
இருந்தால்
"இறைமைஎன்னுள்
எல்லாமுமாய்
இருக்கும்
பஞ்சபூதங்களுக்கு
"நன்றி"


கடனில் வாழ்ந்து
கலங்கினேன்
அழியா
சொத்தடையும்
வழி அறிந்தேன்
இறைமையே
என்னை
வழிநடத்து
உன்னை நோக்கி!!

இக்கணம்
இயக்குகின்ற
இயல்பு
நிகழ்வுகளுக்கு
மட்டுமே
நான்
கருவியாய்.........முன்னனுபவமின்றி
முதன்முதல்
மூன்று குட்டியிட்ட
எனது
நாய்குட்டியிடமும்
தாய்ப்பாசத்தை
நெஞ்சினில்
தைத்தது
யார்...????


இறைமை
என்னவோ
இருக்கத்தான் செய்கிறது???
பஞ்சரான
இடத்திலிருந்து
பத்துநிமிட நடையில்
"வல்கனைசிங்"


பிரம்மத்தின்
பிண்டத்திலும்
பிரம்மண்டமெனில்
பிரம்மத்தின் பிரமாண்டம்......................???


எனை
படைத்து
இன்ப துன்பமுடைத்து
குழப்பி சீராக்கி
எல்லாமுமாக்கிய
"அவன்"
"வில்"
"நான்"
அம்பு
யாரை குறை கூற???

குறிக்கோள்

குறிக்கோள்
என
எதையும்
ஏற்றுகொள்ள
முன்வரவில்லை
இதயம்!!!
கனத்த மனதுடனும்
கசிந்தகண்களுமாய்
பெற்றோர்.
குறிக்கோள்அற்று இருக்கிறானே
"மகன்"
என்று!!!
குறிக்கோள்
என்றவுடனே
பதறுகிறது
மனம்.
எதனோடவாது
பற்றுகிறது!!
தொடுப்புகளில்
தொக்கி
துக்கபடுகிறது!!
முடிச்சுகளில்
முயங்கி போகிறது!!!
தேவைகள்
தீர தீர
புதிதாக பிறக்கிறத!!!
இன்று பணம்,
நாளை புகழ்,
மறுநாள் காமம்,
என மூன்றின்
தேவை
சுற்றி சுற்றி வர
தேவைகள்
மட்டும்
தீர்ந்துபோவதில்லை!!
தேவைகளால்
போராடுகிறோம்!!!
வலிபடுகிறோம்!!!
சுகதுக்கங்கள்
அளக்கிறோம்!!
குறிக்கோளுக்கு
இனங்கிவிட்ட
மறுகணம்
மதம் பிடித்துவிடுகிறது
மனம்!!!
ஒவ்வொருமுறையும்
குறிக்கோளை
அடைந்துவிடுவதாய்
கற்பனித்தாலும்
தோல்வியடைவது நான் தான்.
என்னில்வேலி
போடவிரும்பவில்லை.
எனது
வாழ்க்கையில்
மிதவையாய் மிதக்கிறேன்.....
நீராய் ஒழுகுகிறேன்
பறவையாய் பறக்கிறேன்!!
தீயாய் கனல்கிறேன்!!
காற்றாய் கசிகிறேன்!!
என்னில்
எங்கும் கரைகள்
இல்லை!!!
எதற்கும்
மடைகள் இல்லை!!!
முகாரிகளும் முகாமிடும்!!!
சந்தோசங்களும் குஷிக்கும்!!!
எதையும் நிராகரிக்கவில்லை!!!
எல்லாமுமாய்இருக்கிறேன்.
"நானை" அழித்து!!!
எனது குறிக்கோளேஇக்கணம்தான்!!!

(சொல்லி முடிப்பதற்குள் இக்கணம் கை நழுவி போய்விட்டது )

நாத்திகமா...................?


மனிதன் படைத்ததில்
அவனை விட ஒன்றுமுயர்வில்லை
எனில்
கோயில்
சிலைகள்
முன் மண்டியிடல்........?தானே
தோன்றிய
இறைவன் இருக்கையில்
தானே
தோன்றிய
மனிதன் இருக்க முடியாதா...?

கோயில்
என்பது
வெறும் குப்பைதொட்டி!!!!
ஆம்....
மனிதன்
தன்
மனதிலுள்ள
குற்றங்களை
பாவங்களை
அசிங்கங்களை
கொட்டித்தீர்க்கும்
குப்பைத்தொட்டி

நீங்கள்
எத்தனை
சவங்களின்
மேல்
ஆலயங்களை எழுப்பினீர்கள்
என
சாமியிடம்
சொல்லவே சொல்லாதீர்
அவன்
திருப்பள்ளி எழவேமாட்டான்...

உருவாக்கியது
அனைத்தும்
அழிந்து போகுமெனின்
எம்மால்
உருவாக்கப்பட்ட
இறைவனும்
அழிந்து போய்விடுமோ???

திருவிளையாடல்
அவதாரம்
மறைநூல்அனுப்புவது...
அவ்வப்பொழுது ஆகாசவானியில்
கட்டளையிடுவது...
தீர்ப்பு நாள்
என்று பயமுறுத்துவது. ...
இதை தவிர
வேறேதுனும்
வேலை உள்ளதா?
இறைவனுக்கு...........

கண்ணுக்கு தெரியாத
கருத்து ஒன்று
கடவுள்
என்ற பெயரில்
தினமும்
என்னை
கண்காணித்து கொண்டே
இருக்கிறதாம்......
வேறு ஏதும் வேலை
இன்றி.......
போக வேண்டியது தானே
எங்கேனும்.....
தேவையற்ற
என்னின்
ரகசிய அந்தரங்களை
நோன்டி கொண்டும்
அதற்கு
மதிப்பெண்கள்
போட்டுக்கொண்டும்...
தீர்ப்பு நாள்
அன்று
தண்டனை தரவும்
சீ...
தேவை இல்லை
போ....

என்னை படைத்து
பிறகு
என்னைஅழ வைத்து
சிரிக்க வைத்து
தெரு நாயாய்
திரிய வைத்து
பாவ புண்ணிய
தராசில் நிறுத்தி
பின் என்னை
சாகடித்து
பின்
மீண்டும்
அவனிடம்அழைத்து.......
-----------------------
இந்த கடவுள்
என்ன மன நோயாளியா?


இறைவன்"
என்று
அழைப்பதிலே
தெரிகிறது
இது
ஆணாதிக்க மனமென்று...
"இறைமை"
என்று அழை.....
இருந்தால்......?????

கிருஷ்ணன்
இல்லையென்று
கிருத்துவனும்,
கிறிஸ்து
இல்லையென்று
மகமதியனும்,
அல்லா
இல்லையென்று
அந்தணனும்
கூறுகையில்
மூன்றுமே
இல்லைஎன்கிறேன்
நான்!!!.

சமர்

நான் இந்த களத்தில் போர் புரிகிறேன்....
எனது சிந்தனை
காட்டுப்பாதையிநூடே
செல்கிறது.....
முன்னிரவில் கூட
யாரும்
சென்றதன்
சாத்தியமற்ற
சதுப்பு
நில சகதிகளில்
எனது வீரம்
முங்கி முங்கி
குளிக்கிறது
எனது
கப்பல் கரையில்
சுகப்பட்டு
சூனியமாகி
கிடக்க
பிறக்கவில்லை
இடிமேகங்களிநூடே
பிறழாது...
பிறழ்ந்தாலும்
வெறி கொண்டு
மீண்டும் மீண்டும்
புதிதான
இந்த
புதிய தளத்தில்
இதற்க்கு
முன் தெரியாத
வீரர்களுடன்
ரௌத்திரம் பழகுகிறேன்....
இழப்புகளை ஏற்படுத்தியும்
இழப்புகளை ஏற்றுக்கொண்டும்
அடிகள் கொடுத்தும்
அடி வாங்கியும்
இவ்வளவுதான்
நீள அகலம்
இருக்க வேண்டுமென்ற
விதிமுறைகள் தெரியாது
எனக்கு நானே விதிகள் சமைத்து
எனது
காலடிகளை
அளந்து வைத்திருக்கின்றேன்.
எனது
வெற்றியில்
பங்குகள் போடவும்
அனுமதிப்பதில்லை
தோல்விகளில்
ஆறுதலுக்காக
தோள் தேடுவதில்லை
எனது
திட்டங்கள் சின்னாபின்னப்ப்படும்போது
நான் தெளிவாகவும்
தோல்விகளில்
மிக
கர்வத்துடன்கூடிய நம்பிக்கையோடு....
பல
தோல்விகளோடு
கூடிய
வெற்றிகளை
விழுப்புண் மாரோடு
மையத்தில் நின்று
வாழ்த்துப்பா கொண்டு
வரவேற்த்தாலும்
எனது
தன்முனைப்பின்
வெற்றி வெறியின்
தாகம்
தீர்பபதை விட
எனது
வெற்றியில்
கூட
பிறரின்
தோல்வி
கூடாதெனும்
மனிதநேயமே
மிஞ்சி
கொஞ்சுகிறது....

குருதட்சனை

எனது
அனைத்து
தோல்விகளும்
எனது
மரியாதைக்குரிய குரு.
என்னை
எனதின் கூச்சத்தில்
இருந்து
வெளிஎடுத்தது
என்னின்
எனது
தவறுகளே.
என்னை
நல் வழிப்படுத்திய
குருவிற்கு
என்ன தட்சணை
கொடுப்பேன்
எனது
வெற்றிகளை தவிர்த்து..........

அறியாமையே பரமானந்தம்

கடவுள் இருக்கின்றான்
என்றனர்
ஒப்புக்கொண்டேன்.
இல்லை என்றனர்
ஒப்புக்கொண்டேன்.
இருக்கிறானா, இல்லையா
என்பது குழப்பமானது என்றனர்
அதையும் ஒப்புக்கொண்டேன்.
இறுதியில்
நீ தான் கடவுள்
என்றனர்
அதையும்ஒப்புக்கொண்டேன்.
உண்மையைஉணராது
கடன் வாங்கிய
போதனைகளைஒப்புக்கொண்டேன்.
பின்பு தான்உணர்ந்தேன்.....
ஒப்புக்கொள்வது
என்பது எளிது
ஏனெனில்
நான்
ஆராய்ந்து சிரமப்பட
தேவை இல்லை.
எனது
அறியாமையை ஒப்புக்கொண்டேன்
இப்பொழுது
சின்னதாய் கிரணம் தெரிகிறது
அதிலே இருக்கிறேன்.

துரத்தல்.........? துறத்தல்...?

சகலத்தையும்

சகிக்காது

ஓடி ஒளியும்

கோழை போல்

துறப்பதற்கு

ஏதும் இல்லாத போதும்,

துறப்பது போல

துறவற

நாடகம் கொள்ளுவது துறவா...?

இல்லறத்தை

அனுபவித்து

சுக துக்கம் அறிந்து

இதனூடே சுகித்து

இதனின் வேரோடு

உறவு கொள்ளாது,

சமரிட்டு

சாம்ராஜியங்கள்

சேகரித்து

வெற்றி தோல்வி

சமன் செய்து

விரும்பாது விரும்பி,

இல்லாமல் இருந்து,

துறப்பதற்கு எல்லாம் இருந்தும்...

மனதில் இருந்து துரத்தலே துறவோ....???
******************************************************************************************சின்னஞ்சிறு
துவேசமும்
என்னை
சினம் கொள்ள
செய்கிறது!!
புகழ்
என்னை
போதை
கொள்ள செய்கிறது!
என்னிடம்
இல்லாததை
பிறரிடம் காணும்
பொழுது
பொறாமை கொள்கிறது!!!
அழகு
ஆளுமை படுத்த நினைக்கிறது!!
சில நேரம்
பிறர்
துன்பம்துடைக்க
விளைகிறது!!
காமமும் தலைக்குஏறுகிறது
கடவுளும்கண்ணை மறைக்கிறது
உறவும் உசுப்பெற்றுகிறது
துறவும் துரத்துகிறது!!!!
என்னுள்ளே
சகலமும்
சகல,சமவிகிதமாய்
சந்ஜாரித்து கொண்டிருக்க
"விட்டுவிடுதலை"
பற்றுகிறது
மனம்.
இதில்
எதை "விடுவது"
என்னில்
இருக்கும்
எதை விட.........?
என்னையே விடவா........????.....

********************************************************************************************
விட்டு,விடுதலையாகி.......
பிணைப்புகள்,
பிணக்குகள்,
சங்கடங்கள்,
சடங்குகள்,
வஞ்சங்கள்,
வக்கிரங்கள்,
வாதங்கள்,
பூசல்கள்,
என
என்னுள்
முகாமிட்டுள்ள
முகங்கள்?
வாடகை முகங்கள்
அனைத்திலிருந்தும்
விட்டு விலகி
விடுதலையாகி
நீராய்...
நெருப்பாய்....
மலையாய்....
வானாய்....
வெளியாய்....
ஆடாய்.....
மாடாய்.....
ஆறை மறந்த எழாய்.....
பிரபஞ்சத்தின்
பின் வெளியில்
பித்தனாய்,
புத்தனாய்,
நாபிக்குள் இருக்கம்
நானாய்
சுகிக்க ஆசை!!!
வல்லமை தாராயோ....?
என்
சூனியத் தாயே...?
*********************************************************************************************

கோணம்

வெளியே....எனக்கு பிடித்த வாசம் மண் வாசம்.

திடுக்கென என் காதலிபார்த்த உற்சாக பதறல்.

மெல்ல சாளரத்தை நீக்கிபார்க்க.....

ஆம்!!!வெளியே எனக்கே எனக்கு பிடித்த காதலர்களின் கூடல்....துளிகூட விகல்பமின்றி உலகே நான்கு சுவராய் எவ்வித தயக்கமின்றி தன் காதலி என்ற பாசத்தால் காதலால் கசிந்துருகி இடியும் மின்னலும் தந்தையாய் தாயாய் மிரட்டி அரட்டிய ஒலி ஒளிகளை மீறி தன் பூமிக்காதலியுடன் புணர புதுசாய் வருகிறது மழை.

இந்த மழைக் காதலனுக்குத்தான் பூமிக்காதலி மீது எத்தனை காதல்,கனிவு!!!பரிவு!!!பற்று!!!

அவளைபார்க்கதீண்டதழுவபல நாள் காத்திருந்து தடை தகர்ந்து உற்சாக பெருக்குடன் உள்ளத்து உணர்ச்சியெல்லாம் அவளிடம் கொட்ட ஆவல் இருந்தாலும்,

காதலியின் பூவுடல் தன் ஸ்பரிசத்தை தாங்க முடியுமா?

தன் உணர்ச்சி வேகத்துக்கு அவளால் ஈடு கொடுக்க முடியுமா?

என்ற பல குழப்ப கேள்விகளால் தயங்கி....முதலில் சிறு தூறலாய், பன்னீர் துளியாய் அவள் உடலில் தெளித்து தன் வரவை...ஸ்பரிசத்தைஅவளைஉணர வைக்கும்அந்த கலையை காமனா கற்றுகொடுத்தான்...?

இல்லைஇது காமனே அறியா அரிய கலையல்லவா?

இந்த பூமியும் தன் காதலனின் வருகையை,அவன் ஸ்பரிசத்தை,மணமாய்,வெளிப்படுத்தி மகிழ்கிறாள்.

அம்மண் வாசனையில் எத்துனை சுகந்தம்!!!காமம் அதில் கால் காசு கூட இல்லை.

அதில் இருப்பது எல்லாம் காதல், பாசம், பரிவு, பரவசம், பகிர்ந்தளிப்புத்தான்.

அவனும் அவளின் மணமறிந்து மெல்ல மெல்ல தன் அன்பை ஆழமாக்க அதில் தீவிரமடைந்து தன்னையே கரைத்து காதலாக்கி மண் எது? மழை எது ? எனத்தரம் பிரிக்கத்தெரியாது....

மண்ணே மழையாய்,

மழையே மண்ணாய்,
கரைந்து கசிந்து
ஆனந்தபரவசத்தில்

ஊரெல்லாம் வலம்

வர உலகமே உற்சாகமடைகிறது.

மீண்டும் மெல்ல மெல்ல தன் பலத்தை குறைத்து மெதுவாக காதலியை விலக,

காதலனின் பிரிவு பொறுக்காத காதலியின் கண்ணில் மட்டுமல்ல உடல் முழுதும்கண்ணீர்!!!

அங்கு மட்டுமல்ல என் கண்களிலும்தான்...

உள்ளத்தில் இனம் புரியா எதோவொன்றுடன் பார்வையை வெளியே இருந்து மீட்டு

என் பக்கத்துஅறைக்கு திருப்ப இதெல்லாம் பற்றி சற்றும் சலனமின்றி வரவு செலவு கணக்கு பார்த்துக்கொண்டு

எனது அப்பா...!!!!

உணர்வு

என்னால் பிறப்பு இறப்பை ிடவிந்தையாய் என்னத்துணிவது உணர்வுகளைத்தான்.....

அது எப்படி...எங்கே...எவ்வாறு....எவ்வகையில்உருவெடுக்கிறதென உத்தேசமாய் கூட உணர முடியவில்லை???

கோபம்,காதல்,சுகம்,துக்கம் இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ பல்வேறு நாமங்கள் சூடி அறியப்பட்டாலும் நம்மின் எவ்விடத்தை உறைவிடமாய்கொண்டுள்ளதென தெளிவாய் உணர முடிவதில்லை......

பசி,வலி,காமம் வஞ்சம் என இன்னுமும் குழுமி கூட.....உணர்வுகளின்அளவு கோலாலே மனிதமும் அளக்கப்பட, உணர்வுகளின் குழுமமோ மனிதன் என அய்யமேற்பட, சற்றே அயர்வுதான்.

உள் வெளியில்சற்று கூட முயற்சியின்றி உணர்வு உருவாகிட, உருவாகும் உணர்வுக்கும் உள் வெளிக்கும் உறவேதும் இருப்பதுபோல் உணரவில்லை.

உள்வெளியிலே உணர்வு தோன்றிடின் "உள்வெளியே" இயல்பு."உணர்வு" அல்ல....

உணர்வு உண்மை அல்ல எனில் உணர்வின் குழுமமான மனிதனும் உண்மையல்ல...மனிதன் உண்மையல்ல அப்படியா......???

நான் புத்தன் கடவுள்.......? நீ......?

கடவுள் இந்த உலகத்தை படைத்தபின் சற்றே அயர்வாக உணர ........ தனது மஞ்சத்தில் கண்ணயர்ந்தான் அந்நேரத்தில் ஒரு மனிதனின் குரல்...........பூலோகத்தில் இருந்து கேட்டது.மனிதன் கேட்டான், கடவுளே நான் விவசாயம் செய்வதற்கு ஏற்ப எனக்கு மழை பொழிய அருள் புரிய வேண்டுமென கூற..... கடவுளும் அவ்வாறே அருள் பாலித்தான். பூலோகத்தில் உடனே மழை பொழிந்தது.விவசாயியான அந்த மனிதனும் மிகுந்த சந்தோசத்துடன் விவசாயத்தை தொடங்கினான்.கடவுளும் சந்தோசத்துடன் மீண்டும் ஓய்வு எடுக்க செல்ல அந்நேரம் பூலோகத்தில் இருந்து மீண்டும் ஒரு மனிதனின் குரல்.......ஹேய் பகவானே......உடனே இந்த மழையை நிறுத்து எனது உப்பு வியாபாரம் இந்த பாழாய் போன மழையால் தடை பட்டு போய்விட்டது தயவு செய்து உடனே நிறுத்து....... என வேன்டிக்கொள்ள கடவுளும் உடனே மழையையை நிறுத்திவிட ....... உடன் விவசாயி வந்து மீண்டும் கடவ்ளிடம் மழை வேண்டி சண்டை இட மிகுந்த குழப்பமடைந்த கடவுள் மிக நொந்து போய் தனது மந்திரி சபையை கூட்டினார்,"மனிதனின் தொந்தரவிலிருந்து நான் எவ்வாறு தப்பிப்பது" என தனது மந்திரிகளிடம் வினவ........ மந்திரிகளும் அவருக்கு ஒரு மிக அருமையான யோசனயை கூறினர் "கடவுளே தாங்கள் மனிதன் தாங்களை எங்கு தேடினாலும் கிடைக்காத ஒரு இடத்தில் போய் ஒளிந்து கொள்ளவும் என்று கூறினர்
கடவுள் மீண்டும் "எங்கு போய் ஒளிந்து கொள்ள" என வினவ மந்திரிகளில் ஒருவர் "கடவுளே தாங்கள் சந்திரனில் போய் ஒளிந்து கொள்ளவும்" என்று கூறினார்.கடவுள், உடனே தன்து ஞான கண்ணால் பார்க்க......... அங்கு சந்திரனில் நீல் ஆர்ம்ஸ்ட்ரொங் ரொகெட்டில் வருவதை பார்த்து உடனே மறுத்து விடுகிறார். வேறு ஒரு மந்திரி "கடவுளே தாங்கள் இமய மலையில் போய் ஏன் ஒளிந்துகொள்ள கூடாது "என வினவ கடவுள் உடனே தனது ஞான கண்ணால் பார்க்க அங்கு ஏட்முன்ட் இலாரி ஏறுவதைப் பார்த்தார் உடன் அங்கு செல்லவும் மறுத்து விட்டார். மிக குழம்பி போய் இருந்த நேரத்தில் மந்திரிகளிலே மிக முதிய மந்திரி கடவுளிடம் "கடவுளே தாங்கள் மனிதனுக்குள்ளே சென்று ஒளிந்து கொள்ளுங்கள்.....அவன் உஙகளை ஒரு போதும் கன்டு பிடிக்க முடியாது" என கூற கடவுளும் தனது ஞான கண்ணால் பார்க்க்க " கோவில்,மசூதி,சர்ச் என எல்லா இடத்திலும் மனிதன் தன்னை தேடி தேடி வரக்கண்ட கடவுள்,மனிதன் ஒரு போதும் தன்னுள்ளே ஒரு போதும் பார்க்க்கவே இல்லை.மிக்க மகிழ்ச்சி அடைந்த கடவுள் உடனே சென்று மனிதனின் உள்ளே ஒளிந்து கொண்டான். நாமும் அவரை எங்கு எங்கோ தேடி தேடி ஒடுகிறோம் அவர் நம் ஒவ்வொருவருனுள்ளே இருப்பது தெரியாமல்.................

அப்படின்னா ஒருத்தன் உள்ளே இருந்தும் கடவுள் வரமாட்ட்டாரா? அப்படி ஒரு சில மனிதர்களிடம் இருந்து வெளியே வந்தது தான் நமது சித்தர்கள்,ஞானிகள்,ஸூஃபிகள்,நபிகள்,(இயேசு,ரமணர்,புத்தர்).Evolution theory படி கூட நாம் புல்லில் இருந்து,புழுவில் இருந்து பிறகு குரங்காய் மாறி இன்றைய மனிதனாக மாறி நிர்க்கின்ட்றோம்,எனில் நமது அடுத்த கட்ட வளர்ச்சி என்ன?

ஆறாவது அறிவில் இருந்து ஏழாவது அறிவிற்க்கு எப்படி முன்னேறுவது? இந்த வளர்ச்சி போதும் என நின்று விடுவோமா?

வெறும் அறிவியல்,தொழில் சமுதாய,பொருளாதார வளர்ச்சியோடு நமது வளர்ச்சியின் எல்லை முடிந்து விட்டதா?உள்முக வளர்ச்சி தேவை இல்லயா?

அது இறைவனை நோக்கியதா? இல்லை நம்மின் அடுத்த கட்ட வளர்ச்சியா?......... என்று வளர்ந்து பார்த்துதானே உணர முடியும்.

ஆத்திகம் ஜெயுக்குமா அல்லது நாத்திகம் ஜெயுக்குமா என்று கேள்வி கேட்டால்...கண்டிப்பாக

கண்டிப்பாக நாத்திகம்தான் ஜெயிக்கும."கடவுளை காட்டுன்னு" ஒரு கேள்விக்கு யார்க்கிட்டெயும் பதில் கிடையாது.

மத நம்பிக்கையிலிருந்து ஆன்ம வளர்ச்சி அடைவதைவிட.....நாத்திகமறிந்து பின் ஆன்ம அறிவு பெருவது மிகுந்த அறிவுடமையாகும்.

we are highly rational generation and we need to see to believe it.so rather than just beleive what a religious guy said or an atheist said why dont we put in our effort, take a 90 degree INWARD.......lookwithin ourselves,ask for the billion dollar question WHO AM I ? to ourselves.

அகக்கண் கொண்டு உலகை பார்ப்பதோடு எப்போதாவது.....உட்கண் கொண்டு நம்மின் உள்ளேயும் பார்க்கத்தான் செய்வோமே....(dont just give weird arguement like i can see thro an X-ray what is inside me ?)

இது கடவுள் இருக்காரா இல்லையன்ற கேள்விய காட்டிலும்.... நமக்கு அவர் மெல நம்பிக்கை இருக்க இல்லயன்ற கேள்விய காட்டிலும் நமது உள் முக வளர்ச்சி தான் நமது அடுத்த கட்ட வளர்ச்சியா என்று சிந்திப்போமே......... இறைவனை வெளியே காண்பவன் இறைவனை உள்ளில் உணர்பவன் ஆன்மிகவாதி.

கிருஷ்ணன் இல்லை என்று கிறித்துவனும் கிறிஸ்து இல்லையென்று முகமதியனும்அல்லா இல்லை என்று அந்தணனும் கூறுகையில் இந்த மூன்றுமே இல்லை என்று கூருபவனாக இருந்த நான்,

மனிதமே முக்கியம், மனிதனே முக்கியம் என்று இருந்த நான்,மனிதனின் அக வளர்ச்சியில் மகிழ்வுற்றிருந்த நான்,கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சி என்னவாக இருக்கும் என்ற கேள்வியின் பதிலை நோக்கிய பயணத்தில் கிடைத்து கொண்டிருக்கின்ற சிறு பல பதில்கள்தான் என்னை ஆண்மதேடலில் செலுத்தியது.

உள்முக வளர்ச்சிக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு பதில்தான் நமது அடுத்த எவலுசன் தியரி.

மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சி ஒருவேளை கடவுளாக இருக்கலாம் தொழில்,பொருளாதாரம்,டெக்னாலஜி இன்னும் இதர பல அக வளர்ச்சிகள் மனிதனை பிரபஞ்சத்தின் ஒரு உயர்ந்த ஜீவராசியாக வைத்திருக்க போகின்றது...

ஆனால் அது வெறும் அக வளர்ச்சிதான் அன்றி வேறில்லை.

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றால் மனிதனில் இருந்து கடவுள் வர வாய்ப்பு இருக்குமோ ? என்ற ஐயம் தான்.....என்னை spritual வழியை நாட வைத்தது....

எனவே.....just ஒரு சின்ன வேதனைதான் .....நம்மோட ஜெனரேசன் ஆவது மதத்தை பற்றி கொண்டிருக்கும் மத வெறியர்கலாய் இல்லாமலும், மதத்தை எதிர்பதற்காகவே அதை பற்றி கொண்டிருக்கும் நாத்திகவாதிகளாகவும் இல்லாமல் வேறு ஒரு தளத்தில் நமது வளர்ச்சியை கொண்டு செல்லலாமே என்ற சின்ன வேண்டுதல் தான்

கடவுள் மனிதனை படைத்தானா இல்லை மனிதன் கடவுளை படைத்தானா?

கடவுள் என்ற ஒன்று மனிதனின் பிறப்பிற்கு முன்பு இல்லை மனிதன் தான் கடவுள் ஆகவேண்டும்.

நபிகள் எவ்வாறு மனிதனில் இருந்து வளர்ச்சி அடைந்து கடவுளோ அல்லது அதை காட்டிலும் உயர்ந்ததகவோ மாறினாரே.... அது போல........ கிறிஸ்து எவ்வாறு மனிதனில் இருந்து கடவுளின் குழந்தையாக மாரினாரோ.... அது போல......புத்தர் எவ்வாறு மனிதனில் இருந்து எவ்வாறு இறைவன் ஆனாரோ அது போல...... நாம் தான் வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு முதல் வழி மதங்களை கடந்த தெளிவு வேண்டும் என்னை பொறுத்தவரை இறைவன் என்பதே ஒரு ஆணாதிக்க வார்த்தை என்று கருதுகிறேன்..... அது இறைமை என்று இருக்கலாம்.

எங்கே தொடங்க எதை தொடங்க...........

இன்று புதியதாய் ஏதேனும் செய்யலாம் என்றால், எல்லாமே இந்த பிரபஞ்சத்தின் வெளியில் கிடக்குது.....ஏதேனும் ஒரு ரூபத்தில்,ஏதேனும் ஒரு வடிவத்தில் ஏதேனும் ஒரு வகையில்.

"இருத்தல்" என்பது தான் நிலையானது போல் எல்லாமே இருக்கிறது....

அன்பு,அகந்தை,பாசம்,காதல்,அழுகை,சிரிப்பு,மரணம்,பிறப்பு,உறவுகள்,உணர்வுகள்இப்படி எல்லாமே இங்கு "இருத்தல்"உக்குள் அடங்கி இருக்கிறது...எனில் புதிதாக நான் என்ன செய்ய...

எதை நான் செய்தேனோ....அது வேறோர் வகையில் முன்பே செய்யப்பட்டுள்ளது....

எது என்னால் புரியப்பட்டதோ ... அது இங்கே இருந்த புரிதல் தான்.

எது என்னால் அறியப்பட்டதோ அது இங்கே இருந்து அறியப்பட்டதுதான்

எது என்னால் ருசிக்க பட்டதோ அந்த ருசி இங்கே இருந்ததுதான்

எது என்னால் புனரப்பட்டதோ அந்த புணரல் இங்கே இருந்ததுதான்...

இங்கிருந்து நான் எங்கேயும் செல்ல வில்லை

எங்கே இருந்தும் இங்கே வரவில்லை

நான் வெறும் வழிப்போக்கனாய்....

இந்த வெட்ட வெளியே!!! என் வழியாய்...

சில நேரம் கொடுரமாய்

சில நேரம் அன்பாய்

சில நேரம் காதலாய்

சில நேரம் காமமாய்

வழிப்போக்கன் உருமாறி உணர்வு மாரி நடக்க.......

"வழி" என்னவோ அப்படியே.......தன் வழியில் தானாக "இருக்கிறது"

Popular Posts

Follow by Email

Blog Archive

Followers