கலவி

மழை
பொழியும்
மேகம்!!
பரவசத்தில்
நிலா!!
நான் மற்றும் நீ

காதலை தொலைத்து

தழுவி
அணைத்து
முத்தமிட்டு முத்தமிட்டு
எனை
கொஞ்சி
கெஞ்சி
கேட்கிறான்
...........
வெறும்போர்வையால்
போர்த்தியிருந்த
எனது
நாணத்தை மீறி
"ம்"
என்றேன்.
"ம்"
என்ற
எனது
சொல்லின்
வீரியத்தை
விட
அவனின்
செயலின்
வீரியத்தில்
17,18
வருடங்களாய்
வைத்திருந்த
என்னை
தொலைத்து
பின் எழுந்து
அவன் கண்ணில்
என் காதலை துளாவினேன்
அவனோ...
எல்லாம் முடிந்து
அமைதியாய் தூங்குகிறான்
என்னில்
அவனை உமிழ்ந்து விட்டு...
காரி துப்பிய
அவனின்
காமத்தில்
காதலை
தொலைத்து
உடைகிறேன்......
அவனின் விந்து போல
எனது கண்ணீரும் சிதற

மீண்டும்

தொப்புளுடன்
மீண்டும் எனது தொப்புளினைத்து
முலைகள்
திருகி சுவைத்து
யோனியின் சந்தினில்
என்னை மீண்டும் திணித்து
ம்
நான் என்ன
எனது தாயை தாய்
மீண்டும்
மனைவிடம் தேடுகிறேனோ......!!!!

என் புத்தி சுய புத்தி

பகுத்தறிவு அப்படின்னா என்ன அப்படின்னே சரியான புரிதல் இல்லை.......... நமக்கு
அதை பற்றிய சரியான புரிதலும் தெரிதலும் இல்லாத போது அதை பற்றி எப்படி இங்கு எல்லாராலும் மிக வீரியமாக விவாதிக்க முடிகிறது என்று எனக்குள் பல நாட்களாக குடைந்துகொண்டிருக்கிறது கேள்விப்புழு ஒன்று........
அப்புறம் எப்படி இத பத்தி நம்ம விவாதிக்க முடியும்.

ஆதலினால் நானும் இங்கு அதைப்பற்றி விவாதிக்க போகிறது இல்லை
இங்கே நான் பதிவது வெறும் என்னுடைய மனதில் விழுந்த சில கேள்வி மழைத்துளிகள் நீராவியாய் மேலே செல்வதற்கு முன் எனக்குள்ளே அவற்றை நன்கு அசை போட்டு பார்க்கும் ஒரு ஆசை தான்.


பகுத்தறிவு அப்படின்னா கண்ண மூடிக்கிட்டு கடவுள எதிர்க்கிறது, அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு என்னோட மதம் பரவா இல்லை ஒன்னோட மதம் தான் கேவலம் அப்படின்னு சொல்றது....................

சாமியே இல்ல அப்படின்னா அப்புறம் என்ன என்னோட மதம் ஒன்னோட மதம்.????

ரௌத்திரத்துடன் "தன்னோட சாதி அடையாளத்துடன்" பிற சாதியை எதிர்க்கிறது.......

கேட்டா.....பகுத்தறிவு எங்களுக்கு வர விடாம இவுங்க சாதிக்காரவுக தான் தடுத்தாங்க அப்படின்னு சொல்றது.........!!!!ஏம்பா இப்போத்தான் ஒனக்கு பகுத்தறிவு வந்துருச்சே அப்புறம் ஏன் நீ போய் திருப்பியும் அந்த சாதி சனியனை தொங்கிகிட்டு கெடக்குற...?/??


சாதியே இல்ல அப்படின்னு சொல்லிட்டு (மொத்தமா சாதிக்கு முழுக்கு போடுறதுதான் பகுத்தறிவு அப்படின்னு நான் நெனக்கிறேன்)அப்புறம் என்ன என்னோட சாதி ஒன்னோட சாதி.....???

பொது புத்தி, சுய புத்தி என்ற இரண்டுக்கிடையில் கெடந்து நம்ம மக்கள் படுற பாடு இருக்கே....ரொம்ப கஷ்டம்......

சுய புத்தி கடவுள,மதத்தை,சாதிய எல்லாம் நம்புறதுக்கு தயாரா இருந்தாலும்,சில சமயங்களில் நம்பி அதன் பின் போனாலும்,

பொது புத்தி ஒடனே.....நம்ம காதுகிட்ட குசுகுசுன்னு ஒன்னு சொல்லும்பாருங்க.......

டே ராசா..............

நீ இப்படி எல்லாம் செஞ்சாலும் வெளில நாலு பேரு கிட்ட பேசுறப்போ....இப்படி "கடவுள் இல்லை" "சாதி இல்லை" "மதம் இல்லை" அப்படின்னு சொல்றதுல ஒரு அதீத தன்முனைப்பு......

தான் மத்தவுங்கள மாதிரி இல்லை, "நான் ஒரு தனிப்பிறவி" அல்லது "நான் ஒரு முற்போக்கு சிந்தனைக்கு சொந்தக்காரன்" அப்படின்ற தன்முனைப்பு....... ஒன்னு இருக்கு அதுக்கு தீனி போடுற மாதிரி காரியம் செய்யநம் அப்படின்னு பொது புத்தி சொல்லும்.......

அந்த தன்முனைப்பு என்ற யானைக்கு தீனி போட்டு தீனி போடு நம்மள நாமே ஏமாத்திகிட்டு நமக்குள்ளேயே......ஒரு கருத்துபேதம் ஏற்ப்பட்டு அப்புறம் நம்ம நம்மளையே சமாதனப்படுத்திக்கிட்டு

இத எல்லாம் யாராச்சும் சொன்னாலும் அவுங்கள எதிரி மாதிரி பாக்குறது.....இவன் வெதண்டவாதக்காரன்........அப்படின்னு ஒரு எண்ணம்.

யார் சொன்னதையும் கேக்காது ஒன்னோட சுய புத்திக்கு எது சரின்னு தோணுதோ அதை தைரியமா செய்

அதுவே பகுத்தறிவு அப்படின்னா என்னோட மனசுக்கு இப்போ நான் சொன்னதுதான் பகுத்தறிவு அப்படின்னு தோனுது அப்போ நான் ஒரு பகுத்தறிவு வாதிதானே.......

அய்ய பெரியார் சொன்ன பகுத்தறிவு இந்த சாதி மாதங்கள் கடந்த ஒரு புரிதல் ஆனா அது எனக்கும் சரிவர இல்ல

அவுங்கவுங்களுக்கு பகுத்தறிவ எப்படி உபயோகப்படுத்தலாமோ அப்படி "படுத்துகிட்டு" இருக்குறாங்க...

இதுல நான் யாருக்கு போய் பகுத்தறிவ பத்தி பாடம் எடுக்குறது.....இல்லாட்டி எனக்கு போய் யாரு பகுத்தறிவு பாடம் எடுக்க முடியும்.

மழை தினங்கள்.............!!!!!!

என் நினைவில் நனையும்

மழை தினங்கள் ஏராளம்!!
சாளரத்தின் வழி
சாரல்களை
உரசியபடி உறிஞ்சி குடித்த
தேநீர் தினங்கள்!!!
உயிர் நனைய
மழை நனைந்து
பின்
உயிர் ஒழுகிய
ஜலதோஷ தினங்கள்!!!
தூறல் தானே என எண்ணி
வெளியே செல்ல.....
நீரில் கண் தெரியாது....
சாலை என நினைத்து
சாக்கடையில் விழுந்த
பய தினங்கள்!!!
தோழியோடு முதல
தினம்
கடல் காண போக.....
என்னையும் அவளையும்
இணைத்த
காதல் தினங்கள்!!!
இப்படி
எத்தனையோ மழை தினங்கள்
மனதில் மலர்ந்தாலும்,
என்னை மழை போல
கரைய வைத்த
மழை தினம்
அன்று ஒரு நாள்
சாலையின்
சக்தியின் ஓரத்தில்
மழையில்
ஒதுங்கி உறங்கிய சிறுவனை கேட்டேன்!!
சோகம்இல்லையா தம்பி.......???
அவன் சொன்னது வார்த்தை அல்ல வாழ்க்கை!!!
"நாளைக்கு காலைல தான் மழை நின்னு போயடும்ள அண்ணே".....

சும்மா

சுழன்று
சூழ்ச்சியரிந்து
செய்த
செயலை விட...
சும்மா
"இருத்தலின்"அமைதி"சுகம்"

ஞானம்!!!

தனியே
தன்னையே
தேடினேன்,
அகிலத்தின்
அக்குளுக்குள்ளும்!!!
அண்டத்தின்
பிண்டம்தான்
நீ உணர்....
உன்னை
உன்னுள்ளே
என்றது ஞானம்!!!
உணரத்துவங்கினேன்
நானும்
மறைந்தது
இனி
யாரை தேட.........???

தமிழ் மண்ணே....என் நாடே....

கசிந்து வழியும்
கண்ணீரை கழுவி
கண்ணுக்குள் தீ வளர்த்து
காக்கும்
தாய் சேய் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
உன் ஞாபகம் !!!!
காசு தேடி
வாழ்வு தொலைத்து
வியர்வையோடு கண்ணீரும்
உருண்டோடி கவளச்சோறு
உண்ணும்
ஒவ்வொரு முறையும்
உன் ஞாபகம் !!!
காக்கும் கடவுளரும்
கண்ணயர
கன்னியரின் கற்பினை
கருவேப்பிலையாக்கும்
கலாச்சார குப்பையில்
உழலும்
ஒவ்வொரு முறையும்
உன் ஞாபகம்!!!
எனது அறிவெனும்
கற்பை காசுக்கு
கைகழுவிய
விபச்சார விடுதியிலிருந்து
விடுதலையாக
நினைக்கும்
ஒவ்வொரு முறையும்
உன் ஞாபகம்!!!!

சிலுவையில்

என்றோ எங்கோ
இருக்கும்
எனது எதிர்காலம்
சுவைக்க
இன்று இங்கே
இருக்கும்
எனது இளைய
நிகழ்களை
தனிமைப்படுத்தி தவிக்கிறேன்!!!!
பாசம்,
காதல்,
கலாசாரம் விழுங்கிக்கொண்டு
பொருளாதார சமுதாய
மதிப்பீடுகளை
வினைப்பயன்களாய்
வெளியிட்டுக்கொண்டிருக்கும்
எனது நிகழ்களை கண்டு
எனக்கே சோர்வாய் தோன்ற
எதை இழந்து
எதை பெற
எனும் பெரும் சர்ச்சையில்
சூட்சும சரீரமேஇரண்டுபட
இந்தத்தனிமை தவமோ
தனியாய் தன்வழியில்
சிலுவையில்
சிக்கிய
சந்தோஷச்
சிதறலாய்!!!!

Popular Posts

Blog Archive

Followers