துரோகி = விசுவாசி


நீ ஒரு துரோகி!! என்று யாரோ உரக்கச்சொல்லி இருப்பார்போல டெமி மூரிடம்....
நானா துரோகி ? இல்லை!
என்று தன்னையே ஒரு திறந்த புத்தகமாக, திறந்து காட்டிவிட்டார்.
இனிமே நீ ஒரு துரோகி அப்படின்னு ஒரு பய சொல்லிட்டு டெமி மூர் கிட்ட வரமாட்டான்.
 
நிற்க 
 
"பெண்களின் காதலையும்" "ஆண்களின் அன்பையும்" , "விசுவாசம்" என்கின்ற பெயரில் அவமதித்துஅவமானம் செய்வது கொங்காக்கூட்டங்களின் முட்டாக்கூழ்த் தனம். 
 
முக்கியமாக மதங்கள் மற்றும் கடவுளின் பெயரைச் சொல்லி, நீ விசுவாசமாக இருக்க வேண்டும்என்று சொல்லி, அப்படி விசுவாசமாக இல்லாதவர்களை துரோகிகள் என்ற பழிச்சொல் சொல்லிஅசால்ட்டாக துடைத்தெறியும் பழக்கத்தை ஆணாதிக்கச்சமூகம் பல காலமாக செய்துவருகிறது. 
 
விசுவாசம் என்பது மூடநம்பிக்கை போன்றது.
 
கண்மூடி ஒருவரை நம்புவது..... 
 
மூடநம்பிக்கைக்கு சற்றும் குறைவில்லாத விசுவாசத்தையும் நான் என்னளவில்ஏற்றுக்கொள்வதில்லை.
 
நீ விசுவாசியா என்று கேட்டவர்களை போடா முட்டாத்துரோகி என்று கண்டபடி கெட்டவார்த்தையில் திட்டி இருக்கின்றேன். 
 
நமது புராண இதிகாசமான இராமாயணத்தை எடுத்துக்கொண்டால் சீதையின் காதலையும்அனுமாரின் அன்பையும் புரிந்து கொள்ளாத கேரக்டர் ராமனாக இருந்தால் என்ன ராவணனாகஇருந்தால் என்ன? நமக்கு பொருட்டே இல்லை!!
"என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" என்று ஆண்டவராகிய யேசு கிறிஸ்து பற்றி அந்த ஆண்டவரே சொன்ன மாதிரி விவிலியங்களிலும் கதை சொல்லி இருக்கிறார்கள். 
 
குரானிலும் சொல்லி இருப்பார்கள் ( அப்பாடா மும்மதங்களையும் குறிப்பிட்டாகிற்று இனி மதத்வேஷம் என்று எதாவது ஜெயமோஹ எழுத்தாழ எழும்பிகள் பொங்கியழ மாட்டார்கள்) 
 
நல்ல வேளை டெமி மூர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை, அப்படி ஒருவேளை நடித்திருந்தால் வெண்முரசில் வைத்து வெள்ளாவி வைத்ததைப் போலவும், சீதையைச் சந்தேகித்து தீக்குளிக்க வைத்தது போலவும், அனுமானின் நெஞ்சைப் பிளந்து ரத்தம் சொட்ட சொட்டக் காட்டியது போலவும் டெமி மூரை கதறக் கதறக் கற்பழித்துக் காட்டி இருப்பார்கள் தமிழ் இயக்குனர்கள். நம் நடிகர்களுக்கும் அதற்கு மேல் என்ன செய்வது என்பது தெரியாதக் காலக்கொடுமை!!!
 
நான் கூட ரீபோஸ்டில் போய் அந்த வீடியோவை டவுன்லோட் செய்து தமிழ் அறிவுசார் சமூகத்திடம் இது போல ஷேர் செய்திருக்க முடியாது.
ஸ்ட்ரிப் டீஸ் செய்ய விடாத சமூகம் தான் தோலைக்கிழித்து ரத்தமும் சதையும் சிதறச் சிதறச் சிதற சைக்கோத்தனமான வன்முறையின் உச்சமாய் நெஞ்சைக் கிழிக்கவும் தீயில் குதிக்கவும் செய்து மகிழ்கிறது.
 
அதை துரோகம் விசுவாசம் என்று சொல்லி பினாத்துகிறது.
எனவே இந்த " துரோகி" "விசுவாசி" என்று முடை நாற்றமடிக்கும் சொல்லாடல்களை தயவு கூர்ந்து எடுத்துக்கொண்டு தடி எடுத்துக்கொண்டு வரவேண்டாம்.
 
தாடிகள் எல்லாம் தாகூரா?
மீசைகள் எல்லாம் பாரதியா?
வேசத்தில் ஏமாறாதே தோழா!!
 
என்று எம்ஜிஆர் வேடத்தில் நடித்த மோஹன்லால் பாடுவது போல வைரமுத்து எழுதியிருப்பார். 
 
ஏனோ தெரியவில்லை இப்பாடலுடன் இப்பதிவை முடித்து விடலாம் என்று முடித்துக்கொள்கின்றேன்

 

Popular Posts

Blog Archive

Followers