Google+ Followers

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு

தனிப்பட்ட முறையில் ஜல்லிக்கட்டு பற்றிய பெரிய அளவிற்க்கு ஆதரவான அல்லது எதிர்ப்பான கருத்துக்கள் என்னிடம் எப்பொழுதும் இருந்ததில்லை..... 

"தமிழர் பண்பாடு கலாச்சார பாரம்பரியம் மற்றும் இவற்றின் பாதுகாப்பில்" என்ற சொல்வடையில் சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிட்டு சிலாகித்ததும் இல்லை.... 

ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது  என்பதற்கு அந்தத் தரப்பினர் சொல்லும் காரணங்கள், ராமானுஜம் நாடகத்திற்க்கு கருணாநிதி கதை-வசனம் போல ஹேஸ்யம் நிறைந்திருப்பதாகவே படுகிறது.

சில உதாரணங்களை பார்ப்போம்.....

கோயில்களில் கட்டிபோட்டு இருக்கும் யானைகளையும், மாடுகளையும் இந்த பீட்டா அமைப்பினரோ அல்லது மானுட குல விளக்காக விரும்பும் இதர அமைப்பினரோ பார்த்து இருக்கிறார்களா என்பது தெரியவில்லை....

நாய்கள் ஒய்யாரமாக நடந்து சென்று கலந்து கொள்ளும் நாய்கள் ஃபேசன் ஷோக்கள் இவர்கள் கண்ணுக்கு தெரியாத எதோ ஒரு கலர் ப்லைண்ட்னஸ் கலரில் நடக்கும் போல் தெரிகிறது......

கன்னுக்குட்டியோட பாலை திருடி நாம குடிக்கிறதும், கோழியோட கொற பிரசவத்துல கெடைக்குற முட்டையை சாப்பிடுற பயபுள்ளைகளும், லெதர் ஷூ, ஜேக்கட், பெல்ட், லிப்ஸ்டிக், நெயில்பாலிஸ், மேக்-அப் சாதனங்கள் , இப்படி எல்லாத்துலையும் மிருகவதை இருக்கத்தான் செய்கிறது....
இது எல்லாம் தெரிந்து இருந்தும், 

வியாதிகளுக்காக நாம் அருந்தும் பல மருந்துகளில் விலங்குகளைக் கொன்று அவற்றில் இருந்து  எடுக்கப்படும் மூலப்பொருட்களில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

இத்ந்ல்லாம் தெரிஞ்சும் கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாம நம்ம சுயநலத்திற்காக அவற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

விலையுயர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை சோறூட்டி பாராட்டி வளர்த்துக்கொண்டு தெருநாயைப் பழிக்கும் பசப்புக்காரர்கள் இவர்கள்.... இவர்கள் எல்லாம் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது????

இந்த நவீன உலகத்தில் விளம்பரம் தேடிக்கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கின்றது இந்த பீட்டா அமைப்பினருக்கு, ஒரு மருந்துக்கம்பெனியுடன் மோதி ஜெயிக்க முடியுமா இவர்களால், முடியாது.... ஆனால் வெட்டி விளம்பரம் தேட இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டதற்க்கப்புறமும் காவிரித்தண்ணீர் கிடைக்காத ஒரு மாநிலத்தில் அதே சுப்ரீம் கோர்ட் மூலம் ஜல்லிக்கட்டிற்க்குத்தடை வாங்கிதந்து விட்டார்கள்...

சமஸ்கிருத ஆகமவிதிகள் பண்பாடாகவும், பாரம்பரியமாகவும் தெரிகிற கண்களுக்கு சமஸ்கிருதம் தெரியாத தமிழ் மக்களின் பண்பாடுகள் உறுத்தவே செய்யும்

இந்தியாவிடம் அடிமைப்பட்டு கிடக்கும் தேசிய இனங்களுக்கு கிடைக்கும் அவமானமே இது போன்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகள். விடமுடியாது. 

நாட்டு மாடுகளின் அழிவிற்கும் பன்னாட்டு நிறுவனங்களில் லாபத்திற்கும் செய்யப்படும் இந்த அநீதியை,தமிழ்ப்பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மீதான அடக்குமுறைக்கு எதிராக தமிழரின் சனநாயகக் குரலை வலிமையாக பதிவு செய்வோம்.

இந்திய-இந்துத்வாப்பார்ப்பனிய பணியா அரசின் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் நாடகத்தை வன்மையாக கண்டிப்போம்..
Popular Posts

Follow by Email

Blog Archive

Followers