நான் புத்தன் கடவுள்.......? நீ......?

கடவுள் இந்த உலகத்தை படைத்தபின் சற்றே அயர்வாக உணர ........ தனது மஞ்சத்தில் கண்ணயர்ந்தான் அந்நேரத்தில் ஒரு மனிதனின் குரல்...........பூலோகத்தில் இருந்து கேட்டது.மனிதன் கேட்டான், கடவுளே நான் விவசாயம் செய்வதற்கு ஏற்ப எனக்கு மழை பொழிய அருள் புரிய வேண்டுமென கூற..... கடவுளும் அவ்வாறே அருள் பாலித்தான். பூலோகத்தில் உடனே மழை பொழிந்தது.விவசாயியான அந்த மனிதனும் மிகுந்த சந்தோசத்துடன் விவசாயத்தை தொடங்கினான்.கடவுளும் சந்தோசத்துடன் மீண்டும் ஓய்வு எடுக்க செல்ல அந்நேரம் பூலோகத்தில் இருந்து மீண்டும் ஒரு மனிதனின் குரல்.......ஹேய் பகவானே......உடனே இந்த மழையை நிறுத்து எனது உப்பு வியாபாரம் இந்த பாழாய் போன மழையால் தடை பட்டு போய்விட்டது தயவு செய்து உடனே நிறுத்து....... என வேன்டிக்கொள்ள கடவுளும் உடனே மழையையை நிறுத்திவிட ....... உடன் விவசாயி வந்து மீண்டும் கடவ்ளிடம் மழை வேண்டி சண்டை இட மிகுந்த குழப்பமடைந்த கடவுள் மிக நொந்து போய் தனது மந்திரி சபையை கூட்டினார்,"மனிதனின் தொந்தரவிலிருந்து நான் எவ்வாறு தப்பிப்பது" என தனது மந்திரிகளிடம் வினவ........ மந்திரிகளும் அவருக்கு ஒரு மிக அருமையான யோசனயை கூறினர் "கடவுளே தாங்கள் மனிதன் தாங்களை எங்கு தேடினாலும் கிடைக்காத ஒரு இடத்தில் போய் ஒளிந்து கொள்ளவும் என்று கூறினர்
கடவுள் மீண்டும் "எங்கு போய் ஒளிந்து கொள்ள" என வினவ மந்திரிகளில் ஒருவர் "கடவுளே தாங்கள் சந்திரனில் போய் ஒளிந்து கொள்ளவும்" என்று கூறினார்.கடவுள், உடனே தன்து ஞான கண்ணால் பார்க்க......... அங்கு சந்திரனில் நீல் ஆர்ம்ஸ்ட்ரொங் ரொகெட்டில் வருவதை பார்த்து உடனே மறுத்து விடுகிறார். வேறு ஒரு மந்திரி "கடவுளே தாங்கள் இமய மலையில் போய் ஏன் ஒளிந்துகொள்ள கூடாது "என வினவ கடவுள் உடனே தனது ஞான கண்ணால் பார்க்க அங்கு ஏட்முன்ட் இலாரி ஏறுவதைப் பார்த்தார் உடன் அங்கு செல்லவும் மறுத்து விட்டார். மிக குழம்பி போய் இருந்த நேரத்தில் மந்திரிகளிலே மிக முதிய மந்திரி கடவுளிடம் "கடவுளே தாங்கள் மனிதனுக்குள்ளே சென்று ஒளிந்து கொள்ளுங்கள்.....அவன் உஙகளை ஒரு போதும் கன்டு பிடிக்க முடியாது" என கூற கடவுளும் தனது ஞான கண்ணால் பார்க்க்க " கோவில்,மசூதி,சர்ச் என எல்லா இடத்திலும் மனிதன் தன்னை தேடி தேடி வரக்கண்ட கடவுள்,மனிதன் ஒரு போதும் தன்னுள்ளே ஒரு போதும் பார்க்க்கவே இல்லை.மிக்க மகிழ்ச்சி அடைந்த கடவுள் உடனே சென்று மனிதனின் உள்ளே ஒளிந்து கொண்டான். நாமும் அவரை எங்கு எங்கோ தேடி தேடி ஒடுகிறோம் அவர் நம் ஒவ்வொருவருனுள்ளே இருப்பது தெரியாமல்.................

அப்படின்னா ஒருத்தன் உள்ளே இருந்தும் கடவுள் வரமாட்ட்டாரா? அப்படி ஒரு சில மனிதர்களிடம் இருந்து வெளியே வந்தது தான் நமது சித்தர்கள்,ஞானிகள்,ஸூஃபிகள்,நபிகள்,(இயேசு,ரமணர்,புத்தர்).Evolution theory படி கூட நாம் புல்லில் இருந்து,புழுவில் இருந்து பிறகு குரங்காய் மாறி இன்றைய மனிதனாக மாறி நிர்க்கின்ட்றோம்,எனில் நமது அடுத்த கட்ட வளர்ச்சி என்ன?

ஆறாவது அறிவில் இருந்து ஏழாவது அறிவிற்க்கு எப்படி முன்னேறுவது? இந்த வளர்ச்சி போதும் என நின்று விடுவோமா?

வெறும் அறிவியல்,தொழில் சமுதாய,பொருளாதார வளர்ச்சியோடு நமது வளர்ச்சியின் எல்லை முடிந்து விட்டதா?உள்முக வளர்ச்சி தேவை இல்லயா?

அது இறைவனை நோக்கியதா? இல்லை நம்மின் அடுத்த கட்ட வளர்ச்சியா?......... என்று வளர்ந்து பார்த்துதானே உணர முடியும்.

ஆத்திகம் ஜெயுக்குமா அல்லது நாத்திகம் ஜெயுக்குமா என்று கேள்வி கேட்டால்...கண்டிப்பாக

கண்டிப்பாக நாத்திகம்தான் ஜெயிக்கும."கடவுளை காட்டுன்னு" ஒரு கேள்விக்கு யார்க்கிட்டெயும் பதில் கிடையாது.

மத நம்பிக்கையிலிருந்து ஆன்ம வளர்ச்சி அடைவதைவிட.....நாத்திகமறிந்து பின் ஆன்ம அறிவு பெருவது மிகுந்த அறிவுடமையாகும்.

we are highly rational generation and we need to see to believe it.so rather than just beleive what a religious guy said or an atheist said why dont we put in our effort, take a 90 degree INWARD.......lookwithin ourselves,ask for the billion dollar question WHO AM I ? to ourselves.

அகக்கண் கொண்டு உலகை பார்ப்பதோடு எப்போதாவது.....உட்கண் கொண்டு நம்மின் உள்ளேயும் பார்க்கத்தான் செய்வோமே....(dont just give weird arguement like i can see thro an X-ray what is inside me ?)

இது கடவுள் இருக்காரா இல்லையன்ற கேள்விய காட்டிலும்.... நமக்கு அவர் மெல நம்பிக்கை இருக்க இல்லயன்ற கேள்விய காட்டிலும் நமது உள் முக வளர்ச்சி தான் நமது அடுத்த கட்ட வளர்ச்சியா என்று சிந்திப்போமே......... இறைவனை வெளியே காண்பவன் இறைவனை உள்ளில் உணர்பவன் ஆன்மிகவாதி.

கிருஷ்ணன் இல்லை என்று கிறித்துவனும் கிறிஸ்து இல்லையென்று முகமதியனும்அல்லா இல்லை என்று அந்தணனும் கூறுகையில் இந்த மூன்றுமே இல்லை என்று கூருபவனாக இருந்த நான்,

மனிதமே முக்கியம், மனிதனே முக்கியம் என்று இருந்த நான்,மனிதனின் அக வளர்ச்சியில் மகிழ்வுற்றிருந்த நான்,கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சி என்னவாக இருக்கும் என்ற கேள்வியின் பதிலை நோக்கிய பயணத்தில் கிடைத்து கொண்டிருக்கின்ற சிறு பல பதில்கள்தான் என்னை ஆண்மதேடலில் செலுத்தியது.

உள்முக வளர்ச்சிக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு பதில்தான் நமது அடுத்த எவலுசன் தியரி.

மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சி ஒருவேளை கடவுளாக இருக்கலாம் தொழில்,பொருளாதாரம்,டெக்னாலஜி இன்னும் இதர பல அக வளர்ச்சிகள் மனிதனை பிரபஞ்சத்தின் ஒரு உயர்ந்த ஜீவராசியாக வைத்திருக்க போகின்றது...

ஆனால் அது வெறும் அக வளர்ச்சிதான் அன்றி வேறில்லை.

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றால் மனிதனில் இருந்து கடவுள் வர வாய்ப்பு இருக்குமோ ? என்ற ஐயம் தான்.....என்னை spritual வழியை நாட வைத்தது....

எனவே.....just ஒரு சின்ன வேதனைதான் .....நம்மோட ஜெனரேசன் ஆவது மதத்தை பற்றி கொண்டிருக்கும் மத வெறியர்கலாய் இல்லாமலும், மதத்தை எதிர்பதற்காகவே அதை பற்றி கொண்டிருக்கும் நாத்திகவாதிகளாகவும் இல்லாமல் வேறு ஒரு தளத்தில் நமது வளர்ச்சியை கொண்டு செல்லலாமே என்ற சின்ன வேண்டுதல் தான்

கடவுள் மனிதனை படைத்தானா இல்லை மனிதன் கடவுளை படைத்தானா?

கடவுள் என்ற ஒன்று மனிதனின் பிறப்பிற்கு முன்பு இல்லை மனிதன் தான் கடவுள் ஆகவேண்டும்.

நபிகள் எவ்வாறு மனிதனில் இருந்து வளர்ச்சி அடைந்து கடவுளோ அல்லது அதை காட்டிலும் உயர்ந்ததகவோ மாறினாரே.... அது போல........ கிறிஸ்து எவ்வாறு மனிதனில் இருந்து கடவுளின் குழந்தையாக மாரினாரோ.... அது போல......புத்தர் எவ்வாறு மனிதனில் இருந்து எவ்வாறு இறைவன் ஆனாரோ அது போல...... நாம் தான் வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு முதல் வழி மதங்களை கடந்த தெளிவு வேண்டும் என்னை பொறுத்தவரை இறைவன் என்பதே ஒரு ஆணாதிக்க வார்த்தை என்று கருதுகிறேன்..... அது இறைமை என்று இருக்கலாம்.

3 comments:

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

அண்ணா!
உங்கள் கட்டுரை(UTMA) காணக் கிடைத்தது. மகிழ்ச்சி. நீங்கள் கூறுவது ஒன்றும் புதிதல்ல என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இங்கு நீங்கள் கூறிய 'உள்முக நோக்கு' என்பது ஏறக்குறைய எல்லா தீர்க்க தரிசிகளுக்கும் தோன்றியவையே. தாங்கள் அறிந்தவற்றை தங்களுடன் வைத்திருந்தால், அதாவது உபதேசம் என்று மற்றவர்களிடம் பரப்பாமல் இருந்திருந்தால் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் ஒருவன் தன் கட்டுகளில் இருந்து விடுபட்டால் (ஆன்மிகத்தில் தன்னை அறிதல்) தன்னை சுற்றி இருப்பவர்களையும் காக்க அவர்களுக்கும் அருளுவது அதாவது போதிப்பது என்பது தவிர்க்க முடியாத செயல் ஆகும்.அதாவது உங்களுக்கு ஒன்று தெரிந்து இருந்து உங்கள் நண்பருக்கு தெரியாமல் இருந்தால் அவருக்கு விளக்க நீங்கள் முயல்வது போல! அவ்வாறு போதிக்கையில் அவர்கள் அந்த சூழல், மக்கள் ஆகியவற்றுடன் சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டி உள்ளது. அவை சரியாக மக்களைச் சென்று சேர்வதில்லை அல்லது சேர விடுவதில்லை. பண்டைய காலங்களில் மக்களுக்கு தத்துவங்கள் போதித்தது மதங்கள் மட்டுமே, மூட நம்பிகைகளில் இருந்து மன இயலைப் பற்றிய அறிய கருத்துகள் வரை.

எந்த ஒரு மதத்தையும் தோற்றுவித்தவர்கள் கருத்துகளை (அறிவுரைகளை) காலம் மற்றும் இடம் கொண்டு ஆராய்ந்தால் சரியாக அறியலாம்.(மதம் எனும் போதே உலகம் தோன்றியதில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதாகவே உள்ளது. அங்கு கூறப்படுபவை எல்லாம் முழுக்க முழுக்க தங்கள் ஆராய்வு மற்றும் கற்பனைகளில் எழுந்தவை தான்.) ஆனால் அவற்றை பரப்ப முயன்றவர்கள் அதை தங்களுக்கு சாதகமானவற்றை எடுத்து தங்கள் திருபுகளை சேர்த்து விடுகின்றனர். புத்தர், ஏசு, நபிகள் மற்றும் மற்ற மதவாதிகள் (தோற்றுவித்தவர்கள்) அறிய கருத்துகள் கூறி அதன் படி வாழ்ந்து இறந்தனர். அவர்கள் கூறிய கருத்துகள்(உண்மையான பொருளும்,நோக்கமும்) அவரை அடுத்து ஒவ்வொரு தலைமுறைக்கும் தேய்ந்து கொண்டே வருகிறது. காரணம் சரியான (எடுத்துச் செல்பவர்களின் சரியான)புரிதல் இல்லாமை,திரிபு மற்றும் ஆதிக்க மனப்பான்மை.

இந்த திருபகளில் இருந்து தப்பியர்கள் இரு குழுக்கள் உண்டு நான் அறிந்தவரை. மேற்கே சாக்ரடீஸ் ஆரம்பித்த பகுத்தறிவு வாதம்.அவர் மதச் சாயம் பூசவில்லை. அதனால் இன்றும் அவர் கருத்துகளில் துரு படியவில்லை. கிழக்கே சித்த பரம்பரை என்று அழைக்கப்படும் சித்தர்கள் கருத்து.இங்கு இவர்கள் (திரிபுகள் மற்றும் ஆதிக்கத்தில் இருந்து) தப்பிக்க இரண்டு காரணம் ஒன்று மதச் சாயம் பூச வில்லை. மற்றொன்று மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி இருந்தனர்.

பின்பு வந்தவர்களில் ஆன்மிகத்தின் ஆற்றலைப் புரிந்து வெளிப்படுத்தியவர்கள் என என்னால் கூற முடிந்தவர் விவேகானந்தர் மட்டுமே. மக்களை மட்டுமே நினைத்த பயமறிய துறவி அவர். பகுத்தறிவு பாதையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பயணித்தவர் பெரியார்.
இந்தியாவில் மிகச்சிறந்த தொண்டர்கள் கிடைப்பது எளிது. ஆனால் நல்ல தலைவர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பு போன்றது.
இன்றைக்கும் நாம் இவ்விரு பாதைகளையும் பின்பற்றும் சிறந்த ஆன்மிகவாதிகள் மற்றும் பகுத்தறிவுவாதிகளும் காண இயலும். ஆனால் இதை எடுத்துச் செல்லும் எல்லா தலைவர்களும் சூழ்நிலைக்கு தன்னை அர்பணித்தவர் போல் ஆகிவிடுகின்றனர். மிகச்சிறந்தவர் என்று புகழப்பட்டவர் காலம் செல்லச் செல்ல போலி என மாறிவிடுகிறார்.
ஆனால் தொண்டர்கள்(தன்னளவில் பின்பற்றுபவர்) மிகச் சரியான உதாரணமாக இருக்கின்றனர்.

புத்தரிடம் குற்றம் இல்லை அதைப் பரப்பியர்கள் வரலாற்றை மாற்றினார். ஏசுவிடம் குற்றம் இல்லை அவரைப் பரப்பியவர்கள் வரலாற்றை மாற்றினார் அதை போலத் தான் சிறந்த ஆன்மிக வாதிகள் எல்லாம்.

ஆனால் இன்றும் மனதையும் அறிவையும் எந்த சமரசமும் இன்றி ஆராய்வு செய்பவர்கள் உள்ளனர். இருக்கும் குழப்பம் எல்லாம் இருவரால் தான். ஒன்று இவற்றைக் கூறி பிழைப்பு நடத்துபவர்கள். இரண்டாமவர் தங்கள் அறிவை முதலாம் நபரிடம் ஒட்டுமொத்த குத்தகைக்கு தந்து விட்டு பின்பற்றுபவர்கள்.

ஆனால் இந்த இரண்டும் தவிர்க்க இயலாதது (எந்த கொள்கையிலும், தத்துவங்களிலும், மதங்களிலும்) என்பது தான் மறுக்க இயலாத வருத்தம் தரும் உண்மை ஆகும்.

என கருத்தில் தவறுகள் இருப்பின் அது என்னை சார்ந்தவையே. திருத்தி கொள்ள வாய்பளித்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

cupidbuddha said...

பிரபு அண்ணன் அவர்களுக்கு,,,,,, தங்களின் பதிவுக்கு நன்றி. உங்களின் கருத்துக்களுடன் நான் முற்றிலும் ஒத்து போகிறேன்.
////ஆனால் இன்றும் மனதையும் அறிவையும் எந்த சமரசமும் இன்றி ஆராய்வு செய்பவர்கள் உள்ளனர். இருக்கும் குழப்பம் எல்லாம் இருவரால் தான். ஒன்று இவற்றைக் கூறி பிழைப்பு நடத்துபவர்கள். இரண்டாமவர் தங்கள் அறிவை முதலாம் நபரிடம் ஒட்டுமொத்த குத்தகைக்கு தந்து விட்டு பின்பற்றுபவர்கள்////

நீங்கள் கூறியவற்றில் இருந்தே உங்களுக்கு மீண்டும் பதில் அளிக்கவும் விளைகிறேன். நண்பரே...

எனது கருத்து என்பது மதங்களின் மூலமாக அல்லது எந்த ஒரு கருத்துக்களையும் அறிவுரைகளையும் அவற்றை தோற்றுவித்தவர்கள் சரியாக போதித்தார்கள் அதனை திரித்து திரித்து பல்வேறு காரணங்களால் நம்மிடம் இன்று வரும்போதும் இன்னும் நம்மிடம் இருந்து நம்முடைய இளைய தலைமுறைக்கும் போகும் பொழுது இன்னும் நீர்த்து இன்னும் தவறாக கற்பித்தும் கற்றும் கொள்ளப்படும்.எனவே தான் இத்தகைய மிகவும் நுணுக்கமான ஒரு விஷயம்,கடவுள்,ஆன்மிகம்,இறை போன்ற விசயங்களை ஒரு குழு மனப்பான்மையுடன் அணுகாமல் தனிமனித உணர்வாய் உணர்ந்தால் நலம் இல்லை எனில் நீங்கள் சொல்வது போல,மத தலைவர் சொல்லும் ஒரு கருத்தை அதன் குருமார்கள் ஒரு விதமாக புரிந்து கொண்டு அதை தன்னுடைய சீடர்களுக்கு சொல்லும் பொழுது இன்னொரு விதமாக சொல்லி அதை புரிந்து கொள்ளும் ஒவ்வொரு சீடனும் தன்னுடைய மன நிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப புரிந்து கொண்டு சிக்கலாக்கி கொண்டு மத சண்டைகள் ஏற்படுவதை விட தனியே தன்னை உணர்தல் சாலச்சிறந்தது மற்றும் என்னை பொறுத்தவரை இது ஒன்றே ஒரே வழி

மற்றபடி நான் ஒன்றும் புதிதாக கூறவில்லை.......நீங்கள் கூறியது போல....:-)ஆனால் எனது ஒவ்வொரு நொடியும் புதிதாகத்தான் உள்ளது.........

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

பொதுவாக மதவாதிகளை அணுகுவதை விட மத நூல்களை அணுகி அதில் உள்ளவற்றை அறியலாம். அங்கும் திரிபு இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அதே கருத்துக்களை இன்னொருவர்(மதவாதி) சொல்வதை விட நாமே படித்து தெரிந்து கொண்டாலே போதும் என்று கருதுகிறேன். மதத்தை தன்னுடன் மட்டுமே வைத்திருந்தால் போதும் என்று நினைக்கிறேன்.

நல்லது. தொடர்வோம் நலமாக.

பி.கு. 'நீங்கள் கூறுவது ஒன்றும் புதிது அல்ல' என்று கூறியது வழி வழியாக பலரும் பின்பற்றும் பாதை என்ற நோக்கில் தான் கூறினேன். கருத்துத் திரிபு இருந்தால் மன்னிக்கவும்.

Popular Posts

Blog Archive

Followers