இறை........

வருவது
அனைத்திற்கும்
"ஆம்"
சொல்லி ஏற்றுக்கொண்டாலும்
"இல்லை"
சொல்லி மறுதலித்தாலும்
"பிரம்மம்"
என்னவோ
ஆமில்லைக்கு
அப்பாற்பட்ட
இயல்புற்றத்தாகவே
இருக்கின்றது!!!


இறைவனை
காண முடியாதாம்!!!
நீர்த்துளி
கடலில்
கலப்பது போல்
இறைமையிடம்
இணைந்து விடுவதாம்!!!
கலந்த பின்
கலந்தது எது?
கலக்கப்பட்டது எது?
என்றறிய
"நான்"
இருக்க மாட்டேனே ஐயா...
என்றால்....
"நான்"
"இல்லாமையே"
இறைமை"
என்கின்றனர்.



எனக்குள்ளிருக்கும்
நான்
வினவுகிறது
"நான் யார்"


என்னையே
சாளரமாய்
எண்ணி
எனைத் தேட...
சாகரமாய்த் தோன்றிட.....
கரையில்
தனியே
நான்!!!

தனியே
தன்னையே
தேடினேன்
அகிலத்தின்
அக்குளுக்குள்ளும்!!
அண்டத்தின்
பிண்டம் தான்
" நீ "
உணர்
"உன்னை"
உன்னுள்ளே, என்றது
ஞானம்!?!
உணர உணர
நானும்
மறைய...
இனி
இங்கு
யாரை தேட.....???


"நான்"
இறந்து
இருந்தால்
"இறைமை



என்னுள்
எல்லாமுமாய்
இருக்கும்
பஞ்சபூதங்களுக்கு
"நன்றி"


கடனில் வாழ்ந்து
கலங்கினேன்
அழியா
சொத்தடையும்
வழி அறிந்தேன்
இறைமையே
என்னை
வழிநடத்து
உன்னை நோக்கி!!

இக்கணம்
இயக்குகின்ற
இயல்பு
நிகழ்வுகளுக்கு
மட்டுமே
நான்
கருவியாய்.........



முன்னனுபவமின்றி
முதன்முதல்
மூன்று குட்டியிட்ட
எனது
நாய்குட்டியிடமும்
தாய்ப்பாசத்தை
நெஞ்சினில்
தைத்தது
யார்...????


இறைமை
என்னவோ
இருக்கத்தான் செய்கிறது???
பஞ்சரான
இடத்திலிருந்து
பத்துநிமிட நடையில்
"வல்கனைசிங்"


பிரம்மத்தின்
பிண்டத்திலும்
பிரம்மண்டமெனில்
பிரம்மத்தின் பிரமாண்டம்......................???


எனை
படைத்து
இன்ப துன்பமுடைத்து
குழப்பி சீராக்கி
எல்லாமுமாக்கிய
"அவன்"
"வில்"
"நான்"
அம்பு
யாரை குறை கூற???

0 comments:

Popular Posts

Blog Archive

Followers