வாழ்வின் சூட்சுமம்

வாழ்வு, அதிபயங்கர வல்லாயுதத்துடன், தனது கோரபற்களுடன் என் மேல் பாய காத்திருக்கிறது.....

ஒன்று, அதையெதிர்த்து போரிட வேண்டும், அல்லது அதனுடன் சமரசம் செய்து சந்தர்ப்பவாத நுண்ணரசியல் செய்ய வேண்டும், மூன்றாவதாக இன்னொரு வாய்ப்புமிருக்கிறது "வாழ்வேயற்ற" ஒரு புதிய பாதையில் பயணிக்கவேண்டும், 

வாழ்வை நிராகரித்து வாழ்வேயற்ற புதுப்பாதை மரணத்தையொத்ததாகவே இருக்க வேண்டிய அவசியமல்ல.... 

அது வாழ்வையொத்ததாக கூட இருக்கலாம்...... 

மரணிப்பதற்க்காகவே வாழும் ஒரு வாழ்க்கையை விட வாழ்வதற்க்காக கூட மரணிக்கலாமல்லவா....???

இங்கு மரணமென்று நான் சொல்லுவது ஸ்தூல உடலின் மரணமல்ல..... சூட்ச்சும உடலின் அதாவது.... இதுவரை மேற்கொண்டிருந்த ஒரு வகையான வாழ்வியல் முறையிலிருந்து ஒரு புது வகையான முற்றிலும் முன்னிருந்த படியெதுவுமில்லாது புதுமாதிரியாய்....

ரத்தத்தின் நிறத்தை மாற்றிப்பார்க்கலாம்......

கண்ணீரின் ருசியை இனிப்பாக்க முயற்சிக்கலாம்....

வியர்வையின் மணத்தை மாற்றி சுகந்தமாக்கலாம்....

இப்படி இன்னும் என்னவெல்லாமோ செய்து வாழ்வின் அடிப்பாகத்தை அசைத்துப்பார்க்கலாம்.....

எப்பொழுதும் எனது அல்லது ஒவ்வொவொரு மனிதனின் அடிமனதிலிருந்து  ஒரு குரல் எழும்... எவன் அதை சரியாக கவனித்து கேட்டு அதன் வழியில் செல்கிறானோ அவனது வாழ்வு செம்மையாகும்.... ஆனால் அவ்வாறு அக்குரலை கேட்பதென்பதே அரிது, கேட்ட பின் அதன் படி நடப்பதும் அரிது.... ஏனெனில் உலகில் எளிமையானதை செய்வதுதான் கடினம், சிரமம்.....

உட்குரல் காட்டும் வழியும் அப்படித்தான் எளிமையானது ஆனால் அதன் பாதையில் செல்வதென்பது கடினமானது.... 

சிரமம் பார்க்காது அவ்வழியில் சென்றால் அங்கே தான் நமது வீடு.... 
அந்த வீட்டினுள் தான் விடுதலை.... 
அதுவே அக விடுதலை.... 
அக விடுதலை என்பது அகத்திலிருந்து விடுதலையென்பதல்ல.... அகத்தினுள் இருக்கும் விடுதலை..... 
அதை பெறுவதில்தான் வாழ்வின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது....

சூட்சுமத்தை அறிந்தேதான் ஆகவேண்டுமென்ற எந்த கட்டாயமுமில்லை சட்டமுமில்லை.....

வாழ்வின் கணிக்கமுடியாத பக்கங்களில் தான், அனுமானிக்க முடியா திசைகளில்தான்,புதிரான புரியாதவைகளில்தான் வாழ்வின் மீதான நமது புரிதலும் ஒரு ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது .....

எல்லாவற்றையும் புரிந்து கொண்டு அப்படி என்னதான் கிடைத்து விடப்போகிறது???? இருக்கட்டுமே சில விடை தெரியா கேள்விகளின் சுவாரஸ்யத்தின் சுகமறிவோமே!!!!

வாழ்வின் நீள அகலங்களை வெறும் காசு பணம் கொண்டுதான் அளக்க வேண்டும் என்றில்லை, பணம் காசு போதை பொருள் இவையனைத்தும் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயங்கள், முழுபுத்தகமல்ல.....

ஒரே ஒரு அத்தியாயத்தை வைத்துக்கொண்டு முழு புத்தகத்தையும் படித்து முடித்து விட்டேன் என்பது எவ்வளவு பெரிய அறியாமை....

உனக்கு பணம், மற்றொருவனுக்கு குடும்பம், இன்னொருவனுக்கு போதை, வேறொருவனுக்கு புகழ் இப்படி எத்தனையெத்தனை அத்தியாயங்கள்.....

எனக்கென்னவோ எப்பொழுதும் முழுப்புத்தகத்தை படித்தால்தான் திருப்தி.... புரிந்தாலும் சரி புரியாவிட்டாலும் சரி...... ஆனால் கண்டிப்பாக முழுமையில் தான் பரம சுகம், அதிலே தான் எனது முழுவிடுதலையும் அடங்கியிருக்கிறது.......

வாழ்வு என்னை எத்தனை முறை கலங்கடித்தாலும், கதறடித்தாலும், நிலைகுலையச்செய்தாலும், இதுவே உனது முடிவென்றாலும் ஒவ்வொரு நாளும் புதிதாகத்தான் இவ்வாழ்வில் "இருக்க"ப்பிடிக்கும்.........


0 comments:

Popular Posts

Blog Archive

Followers