நீலத்தாலானதொரு....

கனவுகளுடனான
தொடர்பறுந்த
அந்த
அந்திமப்பொழுதில்,
மூளைத்திசுக்களில்
பெருகிக்கிடக்கும்
ஒட்டடைத்தூசிகளை
கருங்கைகளால்
களைத்துவிட்டுக்காணினும்,
நீலத்தாலானதொரு
அருவம்
அசைந்து அசைந்து 
ஆட ஆட....
எண்ணக்குமிழி
நீர்ச்சத்தத்துடன்
நிலைதழும்பி
மூளைமுட்டி
நாக்கைச்சுட்டு
எனைக்கடந்து
எதிர்ப்பட்டதிசைகளிலெல்லாம்
காற்றலைகளின்
தெரியாப்பாதைகளில்
பயணப்பட்டு......
செவிக்கொரு அர்த்தமாகி
சிதிலப்பட்டு
மீண்டுமொரு
அருவமாய்
வெட்டவெளியில்
சிதறிக்கிடக்கிறது...
அவ்வருவமும்
என்னுளிருக்கும் அருவமும்
ஒன்றென்றறிய
இன்னுமொரு
கால்திவசம்
காத்துத்தானிருக்கவேண்டுமென்ற
அயர்ச்சியிலே
அசந்துகிடந்த
அப்பர்பெர்த்திலிருந்து
கீழிறங்கி
விரைவுந்தியின்
சன்னோலரமாக 
அமர்ந்துகொண்டேன்
இறங்க வேண்டிய தூரமின்னும்
குறைந்ததாகத்தெரியவில்லை......

0 comments:

Popular Posts

Blog Archive

Followers