பர்ப்பிள் கலர் சட்டை.....

பொசுக்கென்று புன்னகைக்கும் பெண்தோழியை மெதுவா சிரிடின்னு சொல்லும் அந்த பையனின் நளினம் அப்பெண்ணின் நளினத்தை விட அழகாய் இருக்கிறது!!!! 

கோபப்பட்டு கொந்தளிக்கும் மனைவியிடம் சரிம்மா சரிம்மா விடு விடுன்னு சொல்லும் ஒவ்வொரு கணவனும் முன்னே மிக அழககாக யாரையோ காதலித்து இருக்கக்கூடும்!!! 

பர்ப்ப்ள் கலரில் முழுக்கைசட்டையெடுத்துக்கொடுத்த காதலி உங்களுக்கு இருந்தாரா...?? ஆசிர்வதிக்கப்பட்டவர் நீங்கள் என்னைப்போல.....!!!

திடமாக இருந்த அத்தனையும் திரவமாக மாறுகிறது உனது அடர்த்தியான மௌனத்தில்.... சரி வா கொஞ்சம் ஐஸ்கிரீம் குடித்துக்கொண்டே மௌனமாடலாம்......!!!

அருந்துபோன செருப்பையும் அவளையும் ஒரே நேரத்தில் சுமந்திருக்கிறீர்களா
அருந்தவம் செய்தவரையா நீர்!!!!!

அந்த சட்டைய இன் பண்ணி போடுங்கன்னு சொன்னா மனைவி
இன் பண்ணாம போடுங்கன்னு சொன்னா காதலி!!!

மெதுவா பேசுங்க பிள்ளைங்க தூங்குறாங்கன்னு சொன்னா மனைவி
மெதுவா பேசுங்க எங்கம்மா பக்கத்துல தூங்குறாங்கன்னு சொன்னா காதலி!!!

உன்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா காதலி
உன்னைய போயி கல்யாணம் பண்ணேனடான்னு சொன்னா மனைவி!!!

சோவெனப்பெய்யும் மழையில் நனைந்தபடி ஓடிக்கொண்டிருக்கும் அப்பெண்ணை அந்த அளவிற்க்கு வெட்கப்பட்டு சிரிக்கவைத்த அந்த குறுஞ்செய்தி அப்படி என்னவாய்த்தான் இருக்கும்!!!

அனுப்பிய மின்மடல்களும், ஆயிரமாயிரம் குறுஞ்செய்திகளும், ஏதோ ஒரு டேட்டாபேஸில் அநாதையாகத்தான் கிடக்கும் எனது உணர்வுபோல!!!



0 comments:

Popular Posts

Blog Archive

Followers