ஞானக்காமம்

FB

புணர்ச்சியின் உச்சக்கடேசி
அந்த இறுதி நொடியில் 
எத்தனை பேருக்கு
கடவுளைக்காணக்கிடைத்தது.....???

துருத்திக்கொண்டிருப்பது 
பிராவின் கூர்மையான துணிப்பந்துதான்
என்பதறிந்தும்
அதையே விறைத்த
முலைக்காம்பாய் எண்ணி
எண்ணக்கலவியை
கண்களால் புணர்ந்து
கொண்டும்தான் சிலர்
இருக்கின்றனர்.

மூத்திரம்
அடிக்கும்பொழுதெல்லாம்
அந்த 
கழிவறைப்புழலில்
எங்கேனும்
எனது 
வாரிசு 
ஒட்டியிருக்கிறதாவென
ஓயாமல்
பார்த்த்க்கொண்டுதானிருக்கிறேனின்றும்!!!!

உள்ளாடைகழற்றும்
பொழுது
கொஞ்சம்
அசூசையாகத்தானிருக்கிறது,
ஆனாலும் 
புணர்ச்சியினுச்சத்தில்
அது கூட அதீத வாசனையாய்த்தானிருக்கிறது.....


உனக்கு மழையிலாட அளவில்லாக்காமம்தான்
எனக்கும் தெரியும் 
"வெளியே போக"
"உனக்கு" அப்படியென்னஅவசரம் 
கொஞ்சம் மெதுவாகவே கூட 
கலவி கொள்ளலாம்-
என அடிக்கொருதடவை
நீயும் சொல்லத்தான் செய்கிறாய்,
ஆனாலும், 
அனேக நேரங்களில்
மழை விரைவாகத்தான்
நின்றுவிடுகிறது......
ஆம்- பூமிக்கும் உனக்கும் கோபம்தான்!!!!!


ஆண்டவன்
சொன்னதாய் சொல்லியதில்
ஒன்றில்தான்
உண்மையாக இருக்கிறது,
ஆடையகற்றிய பின்
அவ்வளவாக காமமுமில்லை
காதலுமில்லை....

பலாத்காரமாக 
விருப்பமில்லாதவரை வதைத்துப்புணர்வதை காட்டிலும் 
சுய இன்பம் 
காண்பது பரமசுகம்!!!!!

0 comments:

Popular Posts

Blog Archive

Followers