புத்தனாவது எப்படி!!!!!!!

எனக்குள் இருக்கும் புத்தனுக்காய் 
காத்திருக்கிறேன்.....
எனது கோப்பையை காலியாக்கி
பார்க்கிறேன்,
ஒரே நதியில் ஒரே முறை குளிக்க முயல்கிறேன்,
தன்மையும் முன்னிலையுமற்று
இருக்கக்கற்கிறேன்,
போதி மரங்களைனடியில்
அமர இடம் தேடுகிறேன்,
தேநீர்ச்சுவையை விட
தேநீர் ஒசையை ரசிக்கிறேன்,
புத்தனை அங்கிங்கெனாதபடி
எங்கும் தேடுகிறேன்
என்னுள்ளும் தேடுகிறேன்???இறுதியில்
யஷோதரைகளை தேடிப்புணர்கிறேன்,
பின் ரஹுலாதான் 
என்னை புத்தனாக்கினான்!!!


0 comments:

Popular Posts

Blog Archive

Followers