TABULA RASA

Dec 17

Why we always loose what we search for???

we can put it like this, If we can stop searching our pre-imbibed memories and teaching then we will get the "fact" as it is !!!!

when we born our mind is at "tabula rasa" but later knowledge acquisition happens through  numerous middle men like books,parents,teachers, religion,philosophies etc etc,

So our mind starts to "search"  for the things which are poured into us by external factors or the so called middle men, and the dirtiest part is that we start to search for exactly the same way or nature what it has been told or taught to us by those middle man!!!
And this is where we get stuck!!!

Say for instance about a rose.... the people , the books and other middle men  have defined a feature/image about the rose and that is in our store/brain and when we actually look at "the rose" we start to search for the same features which is already registeredin our mind, in the rose which is Infront of us right now and apparently we will loose the rose!!!

So in my understanding and what I have been trying to follow is avoid all the pre occupied definitions which has given  to me , either I will empty my  cup  or break the cup or go back to "tabula rasa" and be an observer!!!

எனதுனது???!!!

Dec 17

உனக்கான காதல்
கொட்டிக்கிடக்கும்
அதே வெட்டவெளியில்தான்
உனக்கான துரோகமும்
கிடக்கிறது.
இது வெட்டவெளியின் குற்றமல்ல!!!'
எனக்காகவும் உனக்காகவும்
எதுவுமில்லை
வெட்டவெளியில்
அது அது அதனியல்பிலிருக்கிறது
எனக்கானதாகவும்
உனக்கானதாகவும்
எண்ணுவம் என்ப இழுக்கு!!!

காமமும் காப்பியும்

Dec 04

காமக்கருவிழியிரண்டில்
குடித்துவிட்டு
மிச்சமிருக்கும்
குவளைக்காப்பியாய்
கொஞ்சமாய்
காதலும்.

மழை நனைந்த மழையில்....

Dec 04

"மழைக்கு"
 பின்னானதொரு உரையாடல்
இயலாமையில் 
புகையும் சிகரெட்டினூடே,
கவிழ்ந்து கிடக்கும் 
மதுக்கோப்பைகளின் மத்தியில்,
முயங்கிக்களைத்த 
மார்பின்மீதோவாகத்தானிருக்கிறது!!!!
அனேகமாய்...... 
அவையொரு 
முடிவின் தொடக்கமாகவோ
அல்லது
தொடக்கத்தின் முடிவாகவே அமைகிறது!!!

கலவிக்கடல்

Dec 04

கலவிக்கடலில்
காதலற்று
நீந்துவதென்பது
துடுப்பற்ற
படகுப்பயணத்திற்க்கு
ஒப்பானதாகவேயிருக்கிறது!!!

தெரியாக்கயிறு...

Dec 04

ஆகப்பெரிய 
உரையாடல்களைகூட
மௌனங்கள் தான்
கட்டிக்கோர்க்கின்றன

பிம்பமற்ற நான்????

Dec 04

நிஜமான 
என்னை 
உதாசீனப்படுத்தி 
ஒதுக்கி வைத்துவிட்டு, 
எனது போலியுடன் 
கொஞ்சிக்குலாவிக்கொண்டிருக்கிறத
 இவ்வுலகம்!!!!

மழலை மொழி

Dec 04

உலகிலுள்ள எல்லா
மொழிகளும்,
அவற்றின்
வரி வடிவங்களும்
வார்த்தைகளும்
வேதனைப்படுத்தப்பட்டு,
உதாசினப்படுத்தப்பட்டு
மண்டியிட்டு மரத்துத்தான் போக வேண்டியிருக்கிறது
உன் மழலையின் முன்னே
என்
ஒரு வயது
பெண்ணே....
 

ஒலியற்ற வெளி

Dec 04

நிஷப்த்த
மழை
காண
பரவசம்!!!!
 

நரகத்திலே இருந்துவிடுகிறேன்........

Dec 04

சொர்க்கத்திற்க்கு போவதெனின்
மரிக்க வேண்டுமாம்!!!
பரவாயில்லை
நான் 
நரகத்திலே
இருந்துவிடுகிறேன்!!!!

எனக்குள் இருக்கும்.......

Dec 04

எனக்குள் இருக்கும் புத்தனுக்காக 
காத்திருக்கிறேன்.....

எனது கோப்பையை காலியாக்கி
பார்க்கிறேன்,

ஒரே நதியில் ஒரே முறை குளிக்க முயல்கிறேன்,

தன்மையும் முன்னிலையுமற்று
இருக்கக்கற்கிறேன்,

போதி மரங்களைனடியில்
அமர இடம் தேடுகிறேன்,

தேநீர்ச்சுவையை விட
தேநீர் ஒசையை ரசிக்கிறேன்,


புத்தனை அங்கிங்கெனாதபடி
எங்கும் தேடுகிறேன்


என்னுள்ளும் தேடுகிறேன்???


இறுதியில்
யஷோதரைகளை தேடிப்புணர்கிறேன்,


பின் ரஹுலாதான்
என்னை புத்தனாக்கினான்!!!

Popular Posts

Blog Archive

Followers