கணங்களற்ற நாம்.........

கடவுளை போல என்னை எப்பொழுதும் குழப்பத்திலாத்துவதில் முதன்மையாயிருப்பது நேரம்!!!

இந்த ”நேரமும்” “கடவுளைப்”போல இருக்கிறதா இல்லையா என்பது ஒரு சர்ச்சைக்குகுந்த புதிராகவே இருக்கிறது!!

அனேகமாக அனைவருக்கும் அது புனிதமாகவே இருக்கிறது.

இல்லாத ஒரு கருத்தை கடவுளாக கருதி கண்மூடித்தனமாக பல காரியம் செய்வதை போலவே.... இந்த நேரமும் இல்லாத ஒரு கருத்தேயன்றி உண்மையல்ல.

அதை தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டு நாம் அனைவரும் பங்கு கொள்ளும் ஒட்டப்பந்தயம் மிக கொடூரம்.

ஆசை அகற்றிய ஆன்மாக்களும்,ஆசைக்குள் உலலும் ஆசாமிகளும், கடவுளை நம்பும் ஆத்திகமும்,கடவுளை நம்பாத ஆத்திகமும் கூட நம்பும், நம்பி அதன் பின்னால் ஓடும்.

காலமற்ற ஒரு உலகை கற்பனை செய்து வடிவமைத்துப்பார்த்தால்,மிக உன்னதமாக உள்ளது,

எதற்க்காகவும் ஒடுவதென்பதிராது!!!!

அனைத்தும், பிரபஞ்ச இயக்கத்திற்க்கு ஒத்திசைவது போன்ற ஒரு அழகிய நடனமாகத்தானே இருக்குமேயன்றி எதற்க்காக ஓடுகின்றோமென்றே தெரியாது, ஒடப்படும் பந்தயங்கள் இல்லை.

எனவே அங்கு போட்டிகளில்லை!!

போட்டிகளில்லை எனவே வெற்றி தோல்வியில்லை!!!

வெற்றி தோல்வியில்லை எனவே பரிசில்லை

பரிசில்லை எனவே பொருளில்லை

பொருளில்லை எனவே சுரண்டலில்லை

சுரண்டலில்லை எனவே

வர்க்கமில்லை,பொருள்முதல்வாதமில்லை,கருத்துமுதல்வாதமில்லை,சாதியில்லை,

இன்னும் பல இல்லையில்லை இல்லவேயில்லை!!!

இல்லையென்பது உறுதியாக தெரிந்துவிட்டதால் எது குறித்தும் “தேடல்” இல்லை!!!

தேடல் இல்லாத்தால் ஆசை இல்லை!!!

ஆசையில்லாததால் ”நான்” “எல்லாமுமாய்”............

எதையெதையோ ஆபத்தாக,அழிவுக்கு காரணமானதாக, கருதும் நாம் உண்மையான ஆபத்தை,காலத்தை(இதனால் தான் ”காலன்” என்று கூறுகிறோமோ)கணத்தை(பாரமானதை துறக்க வேண்டுமோ) தலையில் தூக்கி வைத்து கடவுளை விட அதிகமாக புனிதப்படுத்துகிறோமோ.........!!!???

0 comments:

Popular Posts

Blog Archive

Followers