கவிஞன்....கவிதை...எழுத்து

"எழுது"
"எழுதாதே"
என எனக்குள்
இரு துருவங்கள்
திமிர் கொண்டு அலைக்கழிக்க
"எழுத" எனில்.....
"எதை" எழுத???
தனிமை,
காதல்,
தாய் என
பிரபஞ்சத்தின்
பிரதான பாடு பொருள்களனைத்தும்
கருவாகி
கவிதையாகி
கனிந்துவிட்டிருக்க....
எழுத்து,கவிதை,
என
என் தமிழ் தொடாத
எதுவும்
இப்புவியில்
இப்போதைக்கு
இல்லை என்றிருக்க,
புதிதாய்
நீ,
எதை
புனைக்க என
"எழுதாதே" துருவம்
எனை இம்சிக்கையில்
"எழுது"
எனும் துருவம்
"எழுதாதே" பற்றி
இப்படி ஒரு கவிதை
எழுதச் சொல்லி
என்னை கவிஞனாக்கி கொண்டே
கொண்டே
சுகிக்கிறது........

0 comments:

Popular Posts

Blog Archive

Followers