உலக காதலர் தினம்.
இன்னிக்கு ஒரு நாள் மட்டும் காதலுக்காக உருகி,பரிசுகள் வழங்கி,பரஸ்பர அன்பை பரிமாரிக்கொள்ளுவதில் எனக்கு பெரிய அளவு உடன்பாடு இல்லாவிட்டாலும்,எல்லோரும் இன்னிக்கு ஏதோ கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்குறாங்க அப்படின்றனாலையோ,இல்லை, இன்னிக்கு ஒரு நாளாவது காதலை பத்தி,
உண்மையிலே எல்லோரும் அவுங்க அவுங்க வேலை பளு,அசதி,வறுமை,துக்கம்,பசி இது எல்லாத்தியும் மறந்து கொஞ்ச நேரம் குறைந்த பட்சம் பேசிக்கிட்டு இருக்காங்களே அதுக்காகவாது,இந்த நாளுக்கு ஏதோ ஒரு வகையில் ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது.......!!!!
காதல் அப்படின்னு சொன்ன வுடனே.....எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையிலே ஒரு ஈர்ப்பு,
உள்ளுக்குள்ளே அப்படியே ரத்தத்துக்கு பதில ஒரு ஐஸ் உருகி ஓடுறா மாதிர்ரி ஒரு இனம்புரியாத உணர்வு,
நெறைய தைரியம்,தன்னம்பிக்கை தருகிற விஷயம்,
நெறைய பேருக்கு கெடச்சு, நெறைய பேருக்கு கெடைக்காத ஒரு உதார் பழம்.
வாழ்கையில் அழகானதும் நேர்த்தியானதுமான சில விசயங்களை நாம் வாழ்ந்து பார்க்க முடியும்.
ஆனால் அவைகளை விவரித்தல்,அவைகளுக்கு பொருள் கூறுதல் மிகவும் கடினம்.அன்பு,காதல் போன்றவைகளும் அதுபோலத்தான்.அவற்றை உணர்ந்து கொண்டவர்களால் விவரிக்க முடியாது,விவரிப்பவர்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது.
ஒரு மனிதனுக்கு உள்ளே எந்த அளவுக்கு காதல் வளர்கிறதோ அந்த அளவுக்கு அவன் அவனை சுற்றி உள்ளவர்களிடம் அன்பை பரப்ப முடியும்.
"காதல் இல்லாதவர்கள் காமத்தால் மட்டுமே நிறைந்திருப்பர்"
காதல் ஒரு பரவச நிலை.......
ஆன்மாவின் ஆழத்தை காணுகின்ற ஒரு பேரனுபவம்.
நமது இருப்பின் உச்ச நிலையை தொடுகின்ற இயல்பான இன்ப நிலை,தூய சந்தோஷமும் கண்ணுக்கு புலப்படாத பரவச நிலையையும் நமக்களிக்கும் இந்த காதல்.
எந்த விசாரணையும் எந்த வரைமுறைகளும் இல்லாமல் போகின்ற நிலை.
நமக்குள் இருக்கும் அந்த காதல் எனும் அமைதியான குன்றின் மீது ஏறும் பொழுது நான் என்ற அகந்தை இல்லாது இருக்கிறது,நேரம் ஒன்று இருப்பது மறந்து போகிறது.நான் காதலில் இது வரை விழவில்லை ஏனெனில் என்னை காதல் உயரத்தை நோக்கியே உந்தி இருக்கிறது......
அதை இன்று வாழ்த்தினால் என்ன அல்லது என்றுமே வாழ்த்தினால் என்ன.....
காதலித்தவர்கள்,காதலிப்பவர்கள்,காதலிக்காதவர்கள்,அனைவரும் வாருங்கள்....
நம் எல்லோரிடத்திலும் காதல் உள்ளது.
காதலை கண்டெடுங்கள்......................
- magical realism
- ponniyan selvan @cupidbuddha
- queen elizabeth monarch sun
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......
Popular Posts
-
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு சில காரணங்கள்! பாண்டியர்களின் ஆபத்துதவிகளின் ராஜதந்திரம் மற்றும் அவர்களின் அறம்! ஒரு பெரிய ஹீ...
-
எனை சுற்றிய, சுற்றும் இயல்பு நிகழ்வுகளை சாட்சியாய் பார்க்க, நானில்லாவிடினும் இந்நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்குமென்ற நிதர்சனம் சுட, வெ...
-
மரணம் நம் அனைவருக்குமுண்டு என்ற ஒரே பயங்கரமான உண்மை தான் இந்த உலகில் அன்பு இன்னும் இருப்பத்ற்க்கான ஆதாரமாக இருக்கிறது.... எனது வெறுமை என்னை ...
-
நிதர்சன யதார்த்தத்தில் துகிலுரியபடுகிறது மனிதம். துச்சாதனனாய் மனிதன்!!! லாரி மோதி நடுரோடிலுள்ள நாய் சிதறலில் மன்றாடுகிறது மனிதம் மனதின் கசிவ...
-
தனியே தன்னையே தேடினேன் , அகிலத்தின் அக்குளுக்குள்ளும்..... அண்டத்தின் பிண்டம்தான் நீ " உணர்" .... உன்னை உன்னுள்ளே என்றது ஞானம் !!...
-
என்னவோ எப்பவும் நில்லா காற்றாக நிரைந்து நெருக்குகிறது, பூர்த்தி செய்த பின்னும் அப்படியே......
-
நசுக்கி நானெறிந்த சித்தெறும்பு கூட "ரட்சியும் பிதாவே" என்று "கெடா வெட்டி" "குர்பான்" செய்திருக்குமோ எனக்கு...
-
நிறையத்தான் படித்திருக்கிறேன். நிரம்ப கேள்வி ஞானமும் பெற்றிருக்கிறேன். வானத்தின் கீழான அத்தனை விடயங்களின் மீதான என்னுடைய அனுமானங்களை பலர் வி...
-
முகம் எனக்கு என்னவோ எப்பொழுதும் நிறைய கிடைக்கிறது!!! எனக்கு தேவைப்படுவதும் என்னிடம் தேவைப்படுவதுமாக, அனேக முகங்கள் அடுக்கடுக்காக எனது அகமாறி...
-
Why we always loose what we search for??? we can put it like this, If we can stop searching our pre-imbibed memories and teaching then we w...
1 comments:
உள்ளுக்குள்ளே அப்படியே ரத்தத்துக்கு பதில ஒரு ஐஸ் உருகி ஓடுறா மாதிர்ரி ஒரு இனம்புரியாத உணர்வு //
அப்படியா....
நெறைய தைரியம்,தன்னம்பிக்கை தருகிற விஷயம் //
சரி தான்.
அவைகளை விவரித்தல்,அவைகளுக்கு பொருள் கூறுதல் மிகவும் கடினம்.அன்பு,காதல் போன்றவைகளும் அதுபோலத்தான்.அவற்றை உணர்ந்து கொண்டவர்களால் விவரிக்க முடியாது,விவரிப்பவர்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது. //
என்னது இதெல்லாம்....
நமக்குள் இருக்கும் அந்த காதல் எனும் அமைதியான குன்றின் மீது ஏறும் பொழுது நான் என்ற அகந்தை இல்லாது இருக்கிறது,நேரம் ஒன்று இருப்பது மறந்து போகிறது.நான் காதலில் இது வரை விழவில்லை ஏனெனில் என்னை காதல் உயரத்தை நோக்கியே உந்தி இருக்கிறது...... //
இது பாயிண்ட்.
Post a Comment