உலக காதலர் தினம்.

இன்னிக்கு ஒரு நாள் மட்டும் காதலுக்காக உருகி,பரிசுகள் வழங்கி,பரஸ்பர அன்பை பரிமாரிக்கொள்ளுவதில் எனக்கு பெரிய அளவு உடன்பாடு இல்லாவிட்டாலும்,எல்லோரும் இன்னிக்கு ஏதோ கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்குறாங்க அப்படின்றனாலையோ,இல்லை, இன்னிக்கு ஒரு நாளாவது காதலை பத்தி,

உண்மையிலே எல்லோரும் அவுங்க அவுங்க வேலை பளு,அசதி,வறுமை,துக்கம்,பசி இது எல்லாத்தியும் மறந்து கொஞ்ச நேரம் குறைந்த பட்சம் பேசிக்கிட்டு இருக்காங்களே அதுக்காகவாது,இந்த நாளுக்கு ஏதோ ஒரு வகையில் ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது.......!!!!

காதல் அப்படின்னு சொன்ன வுடனே.....எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையிலே ஒரு ஈர்ப்பு,

உள்ளுக்குள்ளே அப்படியே ரத்தத்துக்கு பதில ஒரு ஐஸ் உருகி ஓடுறா மாதிர்ரி ஒரு இனம்புரியாத உணர்வு,

நெறைய தைரியம்,தன்னம்பிக்கை தருகிற விஷயம்,

நெறைய பேருக்கு கெடச்சு, நெறைய பேருக்கு கெடைக்காத ஒரு உதார் பழம்.

வாழ்கையில் அழகானதும் நேர்த்தியானதுமான சில விசயங்களை நாம் வாழ்ந்து பார்க்க முடியும்.

ஆனால் அவைகளை விவரித்தல்,அவைகளுக்கு பொருள் கூறுதல் மிகவும் கடினம்.அன்பு,காதல் போன்றவைகளும் அதுபோலத்தான்.அவற்றை உணர்ந்து கொண்டவர்களால் விவரிக்க முடியாது,விவரிப்பவர்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது.

ஒரு மனிதனுக்கு உள்ளே எந்த அளவுக்கு காதல் வளர்கிறதோ அந்த அளவுக்கு அவன் அவனை சுற்றி உள்ளவர்களிடம் அன்பை பரப்ப முடியும்.

"காதல் இல்லாதவர்கள் காமத்தால் மட்டுமே நிறைந்திருப்பர்"

காதல் ஒரு பரவச நிலை.......

ஆன்மாவின் ஆழத்தை காணுகின்ற ஒரு பேரனுபவம்.

நமது இருப்பின் உச்ச நிலையை தொடுகின்ற இயல்பான இன்ப நிலை,தூய சந்தோஷமும் கண்ணுக்கு புலப்படாத பரவச நிலையையும் நமக்களிக்கும் இந்த காதல்.

எந்த விசாரணையும் எந்த வரைமுறைகளும் இல்லாமல் போகின்ற நிலை.

நமக்குள் இருக்கும் அந்த காதல் எனும் அமைதியான குன்றின் மீது ஏறும் பொழுது நான் என்ற அகந்தை இல்லாது இருக்கிறது,நேரம் ஒன்று இருப்பது மறந்து போகிறது.நான் காதலில் இது வரை விழவில்லை ஏனெனில் என்னை காதல் உயரத்தை நோக்கியே உந்தி இருக்கிறது......

அதை இன்று வாழ்த்தினால் என்ன அல்லது என்றுமே வாழ்த்தினால் என்ன.....

காதலித்தவர்கள்,காதலிப்பவர்கள்,காதலிக்காதவர்கள்,அனைவரும் வாருங்கள்....

நம் எல்லோரிடத்திலும் காதல் உள்ளது.

காதலை கண்டெடுங்கள்......................

ஜென்.......?????

பேரமைதி.....
இரைச்சலாய் நான்
மீண்டும்
பேரமைதி.
*************************************************************
சுமைகளை
கீழிறக்க
கீழிறக்க,
மேலே
உயரத்தில்..........
***************************************************************
தூரமில்லை
உன்னிடம்தான்
உணர்!!!!
****************************************************************
செருப்பை
வெளியில் விட்டு
மனதோடு கோயிலுக்குள்??
இரண்டும்
ஒன்று தான்!!
****************************************************************
அறிவு
உணர்வதில்லை
உணர்ந்தால்
அறிவில்லை!!!
****************************************************************

அப்படியே......

வாழ்வு
அப்படியே இருக்கிறது
நானும்
அதிலே அப்படியே......

மனதின் கசிவுகளில்
எப்பொழுதும்
ஆசை
எப்போதாவது
மனிதம்.


சென்று வரும் வழியெல்லாம்
சரியாகத்தான்
இருக்கிறது,
என்னைதவிர.......

Popular Posts

Blog Archive

Followers