எங்கே தொடங்க எதை தொடங்க...........

இன்று புதியதாய் ஏதேனும் செய்யலாம் என்றால், எல்லாமே இந்த பிரபஞ்சத்தின் வெளியில் கிடக்குது.....ஏதேனும் ஒரு ரூபத்தில்,ஏதேனும் ஒரு வடிவத்தில் ஏதேனும் ஒரு வகையில்.

"இருத்தல்" என்பது தான் நிலையானது போல் எல்லாமே இருக்கிறது....

அன்பு,அகந்தை,பாசம்,காதல்,அழுகை,சிரிப்பு,மரணம்,பிறப்பு,உறவுகள்,உணர்வுகள்இப்படி எல்லாமே இங்கு "இருத்தல்"உக்குள் அடங்கி இருக்கிறது...எனில் புதிதாக நான் என்ன செய்ய...

எதை நான் செய்தேனோ....அது வேறோர் வகையில் முன்பே செய்யப்பட்டுள்ளது....

எது என்னால் புரியப்பட்டதோ ... அது இங்கே இருந்த புரிதல் தான்.

எது என்னால் அறியப்பட்டதோ அது இங்கே இருந்து அறியப்பட்டதுதான்

எது என்னால் ருசிக்க பட்டதோ அந்த ருசி இங்கே இருந்ததுதான்

எது என்னால் புனரப்பட்டதோ அந்த புணரல் இங்கே இருந்ததுதான்...

இங்கிருந்து நான் எங்கேயும் செல்ல வில்லை

எங்கே இருந்தும் இங்கே வரவில்லை

நான் வெறும் வழிப்போக்கனாய்....

இந்த வெட்ட வெளியே!!! என் வழியாய்...

சில நேரம் கொடுரமாய்

சில நேரம் அன்பாய்

சில நேரம் காதலாய்

சில நேரம் காமமாய்

வழிப்போக்கன் உருமாறி உணர்வு மாரி நடக்க.......

"வழி" என்னவோ அப்படியே.......தன் வழியில் தானாக "இருக்கிறது"

0 comments:

Popular Posts

Blog Archive

Followers