கோணம்

வெளியே....எனக்கு பிடித்த வாசம் மண் வாசம்.

திடுக்கென என் காதலிபார்த்த உற்சாக பதறல்.

மெல்ல சாளரத்தை நீக்கிபார்க்க.....

ஆம்!!!வெளியே எனக்கே எனக்கு பிடித்த காதலர்களின் கூடல்....துளிகூட விகல்பமின்றி உலகே நான்கு சுவராய் எவ்வித தயக்கமின்றி தன் காதலி என்ற பாசத்தால் காதலால் கசிந்துருகி இடியும் மின்னலும் தந்தையாய் தாயாய் மிரட்டி அரட்டிய ஒலி ஒளிகளை மீறி தன் பூமிக்காதலியுடன் புணர புதுசாய் வருகிறது மழை.

இந்த மழைக் காதலனுக்குத்தான் பூமிக்காதலி மீது எத்தனை காதல்,கனிவு!!!பரிவு!!!பற்று!!!

அவளைபார்க்கதீண்டதழுவபல நாள் காத்திருந்து தடை தகர்ந்து உற்சாக பெருக்குடன் உள்ளத்து உணர்ச்சியெல்லாம் அவளிடம் கொட்ட ஆவல் இருந்தாலும்,

காதலியின் பூவுடல் தன் ஸ்பரிசத்தை தாங்க முடியுமா?

தன் உணர்ச்சி வேகத்துக்கு அவளால் ஈடு கொடுக்க முடியுமா?

என்ற பல குழப்ப கேள்விகளால் தயங்கி....முதலில் சிறு தூறலாய், பன்னீர் துளியாய் அவள் உடலில் தெளித்து தன் வரவை...ஸ்பரிசத்தைஅவளைஉணர வைக்கும்அந்த கலையை காமனா கற்றுகொடுத்தான்...?

இல்லைஇது காமனே அறியா அரிய கலையல்லவா?

இந்த பூமியும் தன் காதலனின் வருகையை,அவன் ஸ்பரிசத்தை,மணமாய்,வெளிப்படுத்தி மகிழ்கிறாள்.

அம்மண் வாசனையில் எத்துனை சுகந்தம்!!!காமம் அதில் கால் காசு கூட இல்லை.

அதில் இருப்பது எல்லாம் காதல், பாசம், பரிவு, பரவசம், பகிர்ந்தளிப்புத்தான்.

அவனும் அவளின் மணமறிந்து மெல்ல மெல்ல தன் அன்பை ஆழமாக்க அதில் தீவிரமடைந்து தன்னையே கரைத்து காதலாக்கி மண் எது? மழை எது ? எனத்தரம் பிரிக்கத்தெரியாது....

மண்ணே மழையாய்,

மழையே மண்ணாய்,
கரைந்து கசிந்து
ஆனந்தபரவசத்தில்

ஊரெல்லாம் வலம்

வர உலகமே உற்சாகமடைகிறது.

மீண்டும் மெல்ல மெல்ல தன் பலத்தை குறைத்து மெதுவாக காதலியை விலக,

காதலனின் பிரிவு பொறுக்காத காதலியின் கண்ணில் மட்டுமல்ல உடல் முழுதும்கண்ணீர்!!!

அங்கு மட்டுமல்ல என் கண்களிலும்தான்...

உள்ளத்தில் இனம் புரியா எதோவொன்றுடன் பார்வையை வெளியே இருந்து மீட்டு

என் பக்கத்துஅறைக்கு திருப்ப இதெல்லாம் பற்றி சற்றும் சலனமின்றி வரவு செலவு கணக்கு பார்த்துக்கொண்டு

எனது அப்பா...!!!!

1 comments:

Priya Raghu said...

This is my all time favourite

Popular Posts

Blog Archive

Followers