தெளியாத்தெளிவு

தெளிந்தவன் புத்தனாகிறான்....
தெளியாதவன் பௌத்தனாகிறான்.....


புத்தர் ஏதோ உடம்பை மறைக்க கிடைத்த துணியை எடுத்து போர்வை போல சுத்தி போர்த்திவிட்டார்...

புத்தரை போல ஆக வேண்டும் என நினைப்பபவர்களும் அதே போல உடுத்தி விட்டார்கள்.....

புத்தரின் போதனைகள் அங்கே ஏதோவொரு போதி மரத்தடியில் கேட்பாரற்று அநாதையாக கிடக்கிறது....

புத்தபிட்சுகள் போதிமரத்தை எல்லாக்காடுகளிலும் தேடுகிறார்கள்.....

அவரவருக்குள்ளே ஒவ்வொரு போதிமரமிருக்கிறதென்பதையறியாதவர்கள். !

புத்தரும் பாவம் போதிமரத்திலெப்போதும் 
இன்னொரு புத்தர் இருக்கிறாரா என்று தேடிக்கொண்டேயலைகிறார்!!!
போதனைகளை படிப்பது போதிப்பவரை படிப்பதாகுமா....??
போதிப்பவரை படித்தால் போதனையறியமுடியுமா....
போதனையும் போதிப்பவனும் நீயேயானாலன்றி......????
நீயும் போதனையும் போதிப்பவனும் ஒன்றானால் இனி யாருக்கு போதிக்க.....

கூட்டுப்போதனைகளில் கூட்டமாய் குழுமியிருந்தாலும், தனியே தன்னையே அறிபவன் போதிப்பவனை விட ஒரு நிலை உயர்வாயிருக்கலாம்.....

போதனையும் போதையும் ஒன்றாய் விட்டது..... 

போதிமரத்தடியில் புத்தன்
மதுக்கோப்பைகளுடன்
பேசிக்கொண்டிருந்தான்.... இல்லை 
போதித்துக்கொண்டிருந்தான்....
போதையுடன் போதனைகளைக்கேட்டுக்கொண்டிருந்த
கோப்பைகள் 
புத்தனைக்கொன்றுவிட்டு
போதனைகளை போர்வையாக்கி
புத்தபிட்சுகளாக திரிகின்றனர்....
 


0 comments:

Popular Posts

Blog Archive

Followers