சமூக விலகல், சமூக வலைத்தள விலகல், சமூகத்திலிருந்தே விலகல்??

லாக்டவுன் , ஊரடங்கு , போன்ற வார்த்தைகள் சர்வாதிகாரத்தனமான வார்த்தைகள். 

அதிகாரத்திற்கு அடங்க மறுப்பவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு ஒரே வழி அவனை ஸ்தம்பிக்கச்செய்வது. 

செய்து கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கை முறையினை, செயல்பாடுகளை, உணவு பழக்க வழக்கங்களை, என அனைத்தையும் ஒரேடியாக நிறுத்தி,

அதை தடுத்து புரட்டிப்போட்டு, தனக்கு வேண்டியவற்றை, தான் சொல்லும் முறையில் செய்ய வைக்கும், ஒரு புது வகையான அரசாட்சி முறைகளை உலக அதிகார வர்க்கங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனவோ என்கின்ற வகையில் ஒரு சாராரும்...... 


குடும்பத்தோடு ஜாலியா இருக்க கிடைத்த வாய்ப்பு என்று நினைத்து, கடேசியில் "ச்சை" எரிச்சலா இருக்கு இவ மூஞ்சிய பாக்குறதுக்கு இதுல என்ன பேச்சு பேசுறான்னு கடுப்புல பயபுள்ளைக பல பேரு, (ஆண்பாலை பெண்பாலாகவும் மாற்றிக்கொள்ளலாம்) 

நான் ஈ கூட பேசுறேன், எறும்பு கூட கவித எழுதுறேன்.... பட்டாம்பூச்சிக்கு பாட்டு சொல்லிக்கொடுக்குறேன்னு ஒரு குருப்பு கெளம்பி இருக்காய்ங்க... 
அந்த ராமரே 14 வருசம் வனவாசம் போனாரு நமக்கு ஜஸ்ட் ஒன்லி 21 டேய்ஸ் தான் கண்ணா கவலப்படாதன்னு சில பேர் ஜல்லியடிக்க.... 

உலக சுகாதார நிலையத்துக்கே சில பல டேட்டா தரவுகளை அவுத்து விட்டு மாஞ்சா தடவாத டாக்டர் பட்டத்த விட்டுகிட்டு இருக்காய்ங்க..... 

சிறுமொளகுல கொஞ்சமா சித்தரத்தைய போட்டு வெந்நீர்ல பதமா தேன் கலந்து அதுல கொஞ்சமா மஞ்சள் பொடி போட்டு இறக்கி முக்கா முக்கா மூணுவேளைக்கு குடிச்சா கொரோனா என்ன அவங்க அப்பத்தாவே நம்மகிட்ட வரமுடியதுன்னு கொஞ்சபேரு..... 
சாவு எல்லாத்துக்குமான முடிவு இல்ல அது ஒரு வகையான புதிய தொடக்கம்னு கொஞ்ச பேரு கதறக்கதற கற்பனையை ஆத்தி விட.... 

கொரோனாவிற்கு எப்படி இந்த மானிடச்சமூகத்தின் மேல் இத்தனை காதல் என்று சிலர் டபாய்த்துக்கொண்டிருக்க

நம் வீட்டு வரவேற்பறை வரை வந்து கொண்டிருந்த இந்த சமூல வலைத்தளங்கள் இப்பொழுது பாத் ரூம் வரை வந்து ஹெல்லோ சொல்லிக்கொண்டிருக்கின்றது.
 
#SocialDistancing என்பது #SocialMediaDisturbing காக மாறிக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை.

வெல்லுஞ்சொல்


மௌனிக்கப்பட்ட சொற்களில் ஒன்று 
ஆத்திரத்தில் துடித்தது....

என்றாவது 
ஒருநாள் ஒலியாவேன், இம்மானுடத்தவறுகளுக்கு ஒளியாவேன் 
எனச் சபதமேற்றது....

அச்சொல் 
பரிணாம 
வளர்ச்சிக்குட்பட்டு 
விந்தின் 
D.N.A வாக மாறியது....
D.N.A வாக மாறியதில்
சொல்லிற்குச் சிறப்புச் சந்தோசம்...

ஆஹா!!!!
புரட்சியாளன் 
எவனோ ஒருவனை 
பிறக்க வைக்கும் 
விந்தணுவில் 
ஒன்றாய் நானானேன்றால் மௌனிக்கப்பட்ட 
எனது ஒலி சபையேறும் 
என்று 
வெற்றிக்கனவு கண்டது...

ஆண்மகவாய் பிறந்து
வளர்ந்தது, 
D.N.A வாக 
மாறிய 
அந்த 
மௌனிக்கப்பட்ட சொல்....
வாலிபமுமடைந்தது..... 
உச்ச மகிழ்ச்சியடைந்தது அச்சொல்....

16 வயதில்
அச்சொல்லுடைய 
புரட்சித்தம்பி
பாத்ரூமிற்குள் சென்று
கைமதுனமடிக்க......

விரயமானது வீரியமான 
அச்சொல் 
யாருக்கும் பயனின்றி....
———— 
மேற்சொன்ன 
கவிக்கதையின் கருத்து யாதெனில் 
வெல்லுஞ்சொல் என்றொன்றில்லை 
நாம் 
சொல்லுஞ்சொல் 
ஒவ்வொன்றும் 
வெல்லவேண்டும்....
வெல்வோம் வா......

@CupidBuddha 
A.C 2020 April 

( A after C - Corona)



Popular Posts

Blog Archive

Followers