காமமற்ற காதல் கள்ளத்தனமானது!!!!

Nov 21

துப்பிச்சென்ற
எச்சிலாய் 
எனது காதல் 
காமப்பெருவெளியெங்கும்.....


சூரியனாய் எனது 
காமமிருப்பினும்
அதன் 
சுடராய் துருத்திதெறித்துத்தெரிவதுமட்டுமே
காதல்!!!!!

அடங்காக்காமத்தை
வெறும் அடக்கி
அருகதையாக்குவது தான் 
காதல்!!!!

யாக்கைமுழுதும் காமம்
ஆனால்
உதட்டிலென்னவோ
காதல்தானெப்போதும்!!!!

காதலை 

கவியெழுதியடக்கலாம்
காமத்தை????

காதலற்ற காமத்தை
உணர்ச்சிபிறழ்தலென
க்கொள்க!!!

காமமற்ற காதலை 

உணர்வேயில்லையெனக்கொள்க!!!!!

காதல் கடவுளிடத்து
ஆங்கே சிறிதெனினும் காமமுள்ளதெனின்!!!

காதற்ப்பெருவெளியை
காமமற்று
கடப்பதென்பது
கள்ளத்தனமானது!!!!

கடவுளையொத்த
காதலை கூட காமம்தான்
பள்ளியறை சேர்க்கிறது!!

காமம் பேருண்மை
காதல் சிற்றுண்மை!!!


காமத்திலிருந்து கடவுளுக்குச்செல்வதற்க்கான
கடவுச்சீட்டு மட்டுமே காதல்!!

Popular Posts

Blog Archive

Followers