சாட்சி

எனை சுற்றிய,
சுற்றும்
இயல்பு நிகழ்வுகளை
சாட்சியாய்
பார்க்க,
நானில்லாவிடினும்
இந்நிகழ்வுகள்
நிகழ்ந்து
கொண்டுதானிருக்குமென்ற
நிதர்சனம்
சுட,

வெற்றிட வெறுமையின்
வெளியில்
என்னை
நெருக்கி
தள்ளும்
நெருப்பை
சுவைக்க
தொடங்க.....

அறிந்தது
அறியாதது,
தெரிந்தது
தெரியாதது,
உணர்ந்தது
உணராதது,
அண்டம்,
பிண்டம்,
ப்ரம்மம்,
அகம்,
புறம்,
அனைத்துமற்றதொரு
சூட்சுமத்தில்
சூனியத்தில்
அமிழ்ந்து
கரைந்து
காணாமல்
போனது(போனேன்).

Popular Posts

Blog Archive

Followers