மரணம்....


மரணம் என்பது நிச்சயம் என்று புரிந்த பின் கூட ஏன் மரணத்தை அணுக நாம் அனைவரும் மறுக்கிறோம், மரணத்தின் மீதான நமது கோபம் அல்லது துக்கம் அல்லது அதை தள்ளி போடுவதற்காக கடவுள் என்னும் ஒரு மாய பிம்பத்தினிடம் எப்பொழுது பேரம் ,இப்படி எல்லா வகையான எதிர்மறை..... உணர்வுகளையே மரணத்தின் மீது நாம் அனைவரும் உணர்த்துகிறோம்.....மரணம் என்றவுடன் ஏன் நம்மிடம் இத்தனை ஆயிரம் எதிர்மறை உணர்வுகள்....????மரணத்திற்கு அப்பால் என்ன இருக்குமோ என்ற ஐயத்தின் காரணத்தினால் ஏற்ப்படும் பயமா...இல்லை மரணம் நம்மிடம் இருக்கும் சகலத்தையும் நம்மிடும் இருந்து பறித்து விடுமே என்ற பயமா........???

....மரண காவியம்

இந்த

காற்று மண்டலத்துடன்

நாம்

செய்து கொண்ட

சுவாச ஒப்பந்தம்

இன்றோடு

நிறைவு பெறுகிறது!!!

போதும்?

இது நாள்

வரைநீ

பூண்ட பொய் வேசங்கள்

கலைத்து

ஒய்வு எடுக்க

காலம் உன்னை

கரம் குவித்து

அழைக்கிறது!!!

வா,

வந்து மரணத்தை நேசி!!!

இது நாள் வரை

நீ

செய்த செயல்களை

சின்னதாய் அசை போடு !!!

நல்லவைகளுக்கு சந்தோஷப்படு!!

தீயவைகளை மறந்து விடு

ஏனெனில்

அவை

உனக்கு

சொர்கத்தையும் தரப்போவதில்லை

நரகத்தையும் தரப்போவதில்லை

மரணத்திற்கு

பின் நீ நீயாவாய்.....

இதுவரைசாதித்ததை

நினைத்து கர்வபடு!!

சாதியாததை எண்ணி

துக்கப்படாதே!!

இனி

உன்னால் ஏதும் செய்ய

இயலாது??மரணத்தை தவிர்த்து!!!

உன்னை

உனக்கு

உன்னதமாக பிரதிபலிக்கபோகும்

மரணத்தை நேசி!!!

உனது

ஜனனத்தை பார்த்துள்ளாயா?

முடிந்திருக்காது!!!

வா,

வந்து,

உனது

மரணதையாவது

முழுதாய்உணர்ந்து பார்!!!

முற்றுப்புள்ளி வைத்தால்தான்

தொடர்கதை காவியமாகும்.

உனது

வாழ்க்கையை

மரணம்

காவியமாக்கும்பொழுது

நீ

ஏன்

அதைக்கண்டு அச்சப்படுகிறாய்!!!

வா,

வந்து

மரணத்தை நேசி....

இப்படி நம்மால் நமது மரணத்தை ஒரு கொண்டாட்டமாக பார்க்க முடியுமா......????

மரணத்தை பற்றி நம் எல்லோருக்குமே ஒரு தைரியமற்ற தன்மை......

ஒரு ஒவ்வாமை,

அதை பற்றி பேசுவது கூட அதை நோக்கிய நம்மின் பயணமாகவே கருதுகிறோம்,

மரணத்தை பற்றி பேசினாலே மரணம் நம்மை கலவி கொள்ளுமோ என்ற ஓயாத கவலை மற்றும் மன அழுத்தம்..........


இப்படி மரண பயம் .........

மரணத்தை குறித்த பயமல்ல

ஆனால்

அது வாழ்வு குறித்த பயம்,

கடவுள் பயம் கூட நமக்கு மரணத்தின் மீதான பயத்தின் தொடர்ச்சியே தவிர கடவுள் மீதான பக்த்தியினாலோ அல்லது இறை நம்பிக்கை மீதான நம்முடைய உறுதியினாலோ அல்ல என்பது எனது எண்ணம்.


மரணம் நம்மிடம் ஒண்ணும் சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிடும் உறவினர் அல்ல.

மரணம் ஒரு நொடியில் ஏற்படும் விபத்து அல்ல. ஒவ்வொரு நொடியிலும் நம்மை மரணம் வந்து நலம் விசாரித்து கொண்டு தான் இருக்கின்றது.


வாழும் ஒவ்வொரு வினாடியும் மரணம் நம்மை சமீபித்துக்கொண்டு தான் இருக்கின்றது......

நாம் தான் வாழ்ந்தது கொண்டு இருக்கின்றோம் என்று நம்மை நாமே ஏமாற்றி கொண்டு இருக்கிறோம்,

உண்மையில் நாம் மரணித்துக்கொண்டு தான் இருக்கின்றோம்,

இந்த உண்மையை ஏற்று கொள்ள முடியாத காரணத்தினால் தான் நம்மை நாமே தேற்றி கொள்ள "வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்" என்று கூறிக்கொள்கிறோம்......

நமக்கு வாழ்வின் மீது நம்பிக்கை இருக்குமே எனில் மரணத்தின் மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும்.............. இருக்கும்.......

உங்கள் வாழ்வு ஒவ்வொரு நொடியும் ஒரு மலர்ச்சியாக இருக்க வேண்டுமெனில் மரணத்தின் மீதான நமது கண்ணோட்டம் மாற வேண்டும்,

வாழும்போதே மரணத்தை பற்றி சரியான புரிதல் இருந்தது எனில் மரணம் கூட ஒரு வழிபாடாக ஒரு கொண்டாட்டமாக,நமது வாழ்வின் ஒரு சிறந்த நிகழ்வாக இருக்கும்.

மரணம் ஒரு மிகப்பெரிய உந்து சக்தி......

மரணம் நமது வாழ்வை இன்னும் அழகாக்குகிறது.......

மரணம் இல்லை என்றால் நாமெல்லாம் எதையும் செய்யத் துணியாமல், செய்ய விருப்பப்படாமல் அப்படியே ஒரு நடை பிணமாக இருந்து இருப்போம்.

மரணமே நம்மை துரிதப்படுத்துகிறது,நம்மை அவசரப்படுத்துகிறது...

இந்த உலகத்தின் எதையும் தவறவிடாமல் நம்மை தடுக்கிறது.

நமக்கு சாத்தியமான அனைத்தையும் நோக்கி நம்மை நகரச்செய்கிறது......

எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் நம்மை சமீபிக்கலாம் என்ற எண்ணமே நம்மை இன்ப துன்பமனைத்தையும் அனுபவிக்கத் தூண்டுகிறது.....

மரணம் இல்லை என்றால் வாழ்வில் எந்த விதமான அர்த்தமுமில்லாது பயனும் இல்லாது அபபடியே உயிருள்ள பிணமாகவே இருந்து இருப்போம்..........


மரணம்....

மரணம் என்பது நிச்சயம் என்று புரிந்த பின் கூட ஏன் மரணத்தை அணுக நாம் அனைவரும் மறுக்கிறோம், மரணத்தின் மீதான நமது கோபம் அல்லது துக்கம் அல்லது அதை தள்ளி போடுவதற்காக கடவுள் என்னும் ஒரு மாய பிம்பத்தினிடம் எப்பொழுதும் பேரம் ,


இப்படி எல்லா வகையான எதிர்மறை..... உணர்வுகளையே மரணத்தின் மீது நாம் அனைவரும் உணர்த்துகிறோம்.....


மரணம் என்றவுடன் ஏன் நம்மிடம் இத்தனை ஆயிரம் எதிர்மறை உணர்வுகள்....????


மரணத்திற்கு அப்பால் என்ன இருக்குமோ என்ற ஐயத்தின் காரணத்தினால் ஏற்ப்படும் பயமா...


இல்லை


மரணம் நம்மிடம் இருக்கும் சகலத்தையும் நம்மிடும் இருந்து பறித்து விடுமே என்ற பயமா........???

இந்த

காற்று மண்டலத்துடன்

நாம்

செய்து கொண்ட

சுவாச ஒப்பந்தம்

இன்றோடு நிறைவு பெறுகிறது!!!

போதும்.....

இது நாள் நாள் வரை

பூண்ட

பொய் வேசங்கள் கலைத்து

ஒய்வு எடுக்க

காலம்

உன்னை

கரம் குவித்து அழைக்கிறது!!!

வா,வந்து மரணத்தை நேசி!!!

இது நாள் வரை

நீ செய்த செயல்களை

சின்னதாய் அசை போடு !!!

நல்லவைகளுக்கு சந்தோஷப்படு!!

தீயவைகளை மறந்து விடு

ஏனெனில்

அவை

உனக்கு

சொர்கத்தையும் தரப்போவதில்லை

நரகத்தையும் தரப்போவதில்லை

பின் நீ நீயாவாய்.....

இதுவரைசாதித்ததை நினைத்து கர்வபடு!!

சாதியாததை எண்ணி துக்கப்படாதே!!

இனி உன்னால் ஏதும் செய்ய இயலாது??

மரணத்தை தவிர்த்து!!!

உன்னை உனக்கு உன்னதமாக பிரதிபலிக்கபோகும் மரணத்தை நேசி!!!

உனது ஜனனத்தை பார்த்துள்ளாயா?முடிந்திருக்காது!!!வா,வந்து,

உனது மரணதையாவது

முழுதாய்உணர்ந்து பார்!!!

முற்றுப்புள்ளி வைத்தால்தான்

தொடர்கதை காவியமாகும்.

உனது வாழ்க்கையை மரணம் காவியமாக்கும்பொழுது நீ ஏன் அதைக்கண்டு அச்சப்படுகிறாய்!!!

வா, வந்து மரணத்தை நேசி....

Popular Posts

Blog Archive

Followers