மரணம்....

மரணம் என்பது நிச்சயம் என்று புரிந்த பின் கூட ஏன் மரணத்தை அணுக நாம் அனைவரும் மறுக்கிறோம், மரணத்தின் மீதான நமது கோபம் அல்லது துக்கம் அல்லது அதை தள்ளி போடுவதற்காக கடவுள் என்னும் ஒரு மாய பிம்பத்தினிடம் எப்பொழுதும் பேரம் ,


இப்படி எல்லா வகையான எதிர்மறை..... உணர்வுகளையே மரணத்தின் மீது நாம் அனைவரும் உணர்த்துகிறோம்.....


மரணம் என்றவுடன் ஏன் நம்மிடம் இத்தனை ஆயிரம் எதிர்மறை உணர்வுகள்....????


மரணத்திற்கு அப்பால் என்ன இருக்குமோ என்ற ஐயத்தின் காரணத்தினால் ஏற்ப்படும் பயமா...


இல்லை


மரணம் நம்மிடம் இருக்கும் சகலத்தையும் நம்மிடும் இருந்து பறித்து விடுமே என்ற பயமா........???

இந்த

காற்று மண்டலத்துடன்

நாம்

செய்து கொண்ட

சுவாச ஒப்பந்தம்

இன்றோடு நிறைவு பெறுகிறது!!!

போதும்.....

இது நாள் நாள் வரை

பூண்ட

பொய் வேசங்கள் கலைத்து

ஒய்வு எடுக்க

காலம்

உன்னை

கரம் குவித்து அழைக்கிறது!!!

வா,வந்து மரணத்தை நேசி!!!

இது நாள் வரை

நீ செய்த செயல்களை

சின்னதாய் அசை போடு !!!

நல்லவைகளுக்கு சந்தோஷப்படு!!

தீயவைகளை மறந்து விடு

ஏனெனில்

அவை

உனக்கு

சொர்கத்தையும் தரப்போவதில்லை

நரகத்தையும் தரப்போவதில்லை

பின் நீ நீயாவாய்.....

இதுவரைசாதித்ததை நினைத்து கர்வபடு!!

சாதியாததை எண்ணி துக்கப்படாதே!!

இனி உன்னால் ஏதும் செய்ய இயலாது??

மரணத்தை தவிர்த்து!!!

உன்னை உனக்கு உன்னதமாக பிரதிபலிக்கபோகும் மரணத்தை நேசி!!!

உனது ஜனனத்தை பார்த்துள்ளாயா?முடிந்திருக்காது!!!வா,வந்து,

உனது மரணதையாவது

முழுதாய்உணர்ந்து பார்!!!

முற்றுப்புள்ளி வைத்தால்தான்

தொடர்கதை காவியமாகும்.

உனது வாழ்க்கையை மரணம் காவியமாக்கும்பொழுது நீ ஏன் அதைக்கண்டு அச்சப்படுகிறாய்!!!

வா, வந்து மரணத்தை நேசி....

1 comments:

SUNDARAN said...

மரணம்.
..........

சீட்டை
'கலைத்து போடு'
அடுத்த ஆட்டத்துக்கு.

Popular Posts

Blog Archive

Followers