அறிவுக்கடல்.....

ஆம்.
நான் அறிவுக்கடல்தான்
பிறரின்
மிச்ச எச்சில்களில் சுகித்து
ரசித்து
வடித்துவார்த்த
நுரைகளில்
நூலோடி
சேர்ந்த
கடல்தான்
அறிவுக்கடல்தான்!!!

சாமி குத்தம்??? சாமி குத்தம்???

சாமி குத்தம்??? சாமி குத்தம்???
உண்மையில பாத்தா
இது
சாமி குத்தம் இல்லை?!?
சாமி செஞ்ச குத்தம்....?!?
ஒருவனிட்ட மலத்தை,
இன்னொருவன் அள்ளும்வகை
சமுதாய
சமச்சீர்
செய்தது
அந்த சாமி செஞ்ச குத்தம்.
அளவுக்குஅதிகமாக உணவு....,
பின் உண்னமுடியாததை
குப்பையில்
அவன்எரிய,
அதை அள்ளி திங்கவும்
இன்னொருவனை
படைச்சானே
அது சாமி செஞ்ச குத்தம்!
ஆடைக்கும்
ஐந்தாறு பெயரிட்டு
அந்த பெயருக்கு
ஆயிரமாயிரம்
சில்லறைகளை
அள்ளி வீசும்போது,
குன்டித்துணி
கோவணம்
கூட இல்லாமல்செய்தது
சாமி செஞ்ச குத்தம்.
எல்லாத்தையும்
இப்படி குத்தமாவே செஞ்சுட்டு
இது எல்லாம்
போன சென்மத்து
குத்தத்துக்கு பரிகாரம்னு
சொன்னானே!!?
இதுதான்
அந்த சாமி செஞ்ச பெருங்குத்தம்
போதும் டா சாமிபோதும்.

Popular Posts

Blog Archive

Followers